மண்டை ஓடு இல்லாத கருவை சுமந்த பெண்., கருக்கலைப்புக்காக 2,000 கிமீ பயணம்!
லூசியானாவின் கருக்கலைப்புக்கு விதிவிலக்கு தேவைப்படும் நோய்களின் பட்டியலில் அக்ரேனியா பட்டியலிடப்படாததால் டேவிஸ் சிகிச்சை பெற்று வந்த உள்ளூர் மருத்துவமனை அவரது கர்ப்பத்தை நிறுத்த மறுத்தது.
அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த ஒரு பெண், அவரது உள்ளூர் மருத்துவமனை தனது கர்ப்பத்தைக் கலைக்க மறுத்ததால், மண்டை ஓடு இல்லாத கருவைச் சுமந்துகொண்டு, நியூயார்க் நகரத்திற்கு சுமார் 1,400 மைல்கள் (2,253 கிலோமீட்டர்) பயணம் செய்துள்ளார்.
Nancy Davis எனும் 36 வயதான அப்பெண் செப்டம்பர் 1-ஆம் திகதி கருக்கலைப்பு செய்தாக கூறினார்.
டேவிஸ் தனது கரு பிறந்த பிறகு உயிர்வாழாது என்று மருத்துவர்கள் கூறியதிலிருந்து கருக்கலைப்பு செய்ய போராடி வந்துள்ளார்.
Nancy Davis கடந்த ஜூலை மாதம் தான் சுமார் 10 வார கர்ப்பமாக இருப்பதையும், ஆனால் கருவின் மண்டை ஓட்டின் மேற்பகுதி வளராமல் போனதையும் கண்டறிந்தார். இது அக்ரானியா எனப்படும் ஒரு அரிய அபாயகரமான நிலை, இது பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தையை உயிரிழந்தக்கச் செய்யும்.
லூசியானாவின் கருக்கலைப்புக்கு விதிவிலக்கு தேவைப்படும் நோய்களின் பட்டியலில் அக்ரேனியா பட்டியலிடப்படாததால், டேவிஸ் சிகிச்சை பெற்று வந்த உள்ளூர் மருத்துவமனை அவரது கர்ப்பத்தை நிறுத்த மறுத்தது.
அதனை மீறி, கருக்கலைப்பு செய்தால் சிறைவாசம், அபராதம் மற்றும் பயிற்சிக்கான உரிமங்களை பறிக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சினார்கள்.
“எனது குழந்தையை அடக்கம் செய்வதற்காகவே நான் என் குழந்தையை சுமக்கவேண்டும்” என்று டேவிஸ் கடந்த மாதம் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, டேவிஸ் தனது சோதனையை ஊடகங்களில் வெளிப்படுத்தினார், மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கருக்கலைப்புக்கு ஆதரவான மாநிலத்திற்குச் செல்வதற்காக ஆன்லைன் GoFundMe பிரச்சாரத்திற்கு கிட்டத்தட்ட $40,000 நன்கொடை அளித்தனர்.
அவர் ஆரம்பத்தில் வட கரோலினாவுக்குச் செல்ல திட்டமிட்டார், ஆனால் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள Planned Parenthood மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் தனது கருவை கலைத்தார்.