தினமும் சிறிதளவு சுக்கு எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள்…?
உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.
சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியே வராமல் தேங்கிவிட்டால் சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிடும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு தூளையும், நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்றானது நீங்கும்.
வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பு சேர்த்து தினமும் காலையில் பல் விளக்க வேண்டும். இது நம் வாய் துர்நாற்றத்தையும், பல் கூச்சத்தையும் நீக்கும். வயிற்றுப் பிடிப்பு அதிகமான வேலை சுமை காரணமாக நன்றாக சாப்பிடாமல், நன்றாக தூங்காமல் மன அழுத்தம் ஏற்படும். இதன்மூலம் வயிற்றில் வாய்வு பிடிப்பு உண்டாகிவிடும். அப்போது அரை ஸ்பூன் சுக்குத் தூளுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் உடனடி நிவாரணம் அடையலாம்.