ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தால் நடவடிக்கை
தமிழகத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரசாயனம் கலந்த சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகங்களுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்திஉள்ளது.
நீர் மாசுநாடு முழுதும் வரும் 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வீடுகள் மற்றும் பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் மக்கள், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.இந்நிலையில், ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால், நீர் மாசு ஏற்படுகிறது.இவற்றை தடுக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பதற்கான வழிமுறையை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது.
நீர்நிலைகளில் ரசாயனம் கலந்த சிலைகளை கரைப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.களி மண் சிலைஇது குறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை இல்லாத, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்
நீர்நிலை
கள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்கள் அமைக்க அனுமதிக்கும்படி, அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது குறிப்பாக, வர்ணம், நச்சு, மக்காத ரசாயன சாயம், வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இவற்றை மீறி நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடிய சிலைகளை கரைத்தால், தமிழ்நாடு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் – 1974ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.