ரசிகரின் கையில் இருந்த தொலைபேசியைத் தட்டிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ – பிரிட்டிஷ் காவல்துறை எச்சரிக்கை
காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), சென்ற பருவத்தின்போது Everton அணி ரசிகர் ஒருவரின் கையில் இருந்த தொலைபேசியைத் தட்டிவிட்டு நொறுக்குவதைப்போல் தோன்றும் காணொளி தொடர்பில் பிரிட்டிஷ் காவல்துறை அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி Manchester United அணியும் Everton அணியும் பொருதியபோது நடந்தது.
அதில் 0-1 என்ற கோல் கணக்கில் Manchester United அணி தோல்வி அடைந்தது.
திடீர்த் தாக்குதல், குற்றவியல் சேதம் ஆகிய குற்றச்சாட்டுகளில் தொடர்பில் 37 வயது ரொனால்டோ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.
அவருக்கு நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், ரொனால்டோ சமூக ஊடகத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
மேலும் வேறோர் ஆட்டத்தைப் பார்க்க வருமாறு அவர் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு அழைப்புவிடுத்தார்.