பிறக்காத குழந்தையை கணக்கு காட்டி வரி விலக்கு பெறலாம்! பிரபல நாட்டில் புதிய சட்டம்
ஜார்ஜியாவில் முதல் நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்தின்படி, இதயத்துடிப்புடன் கருவில் இருக்கும் குழந்தையை கூட குடும்பத்தில் சார்ந்தவர்கள் என கணக்கு காண்பித்து வருமான வரி விலக்கை பெறலாம்.
ஜார்ஜியாவின் செய்தி வழிகாட்டுதல்களின்படி, ”கண்டுபிடிக்கக்கூடிய மனித இதயத்துடிப்பு கொண்ட பிறக்காத குழந்தை” குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனக் கூறலாம். ஜூலை முதல் நடைமுறையில் இருக்கும் இந்த சட்டதிட்டத்தின்படி, 2022-ஆம் ஆண்டிற்கான $3,000 மாநில வருமான வரி விலக்குக்கு தகுதி பெறலாம்.
வரி செலுத்துவோர் தாங்கள் தாக்கல் செய்வதை நிரூபிக்க, சம்பந்தப்பட்ட மருத்துவப் பதிவுகள் அல்லது பிற ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜார்ஜியா வருவாய்த் துறை கூறியுள்ளது.
அரிசோனாவும் ஜார்ஜியாவும் “கருவின் ஆளுமைச் சட்டம்” என்பது கருவுற்ற தருணத்திலிருந்து முழு அரசியலமைப்பு உரிமைகளைக் கொண்ட ஒரு நபர் என்ற கருத்தை நிறுவியது.
அமெரிக்காவில் நாடு முழுவதும் கருக்கலைப்பு உரிமை தொடர்பில் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்ததையடுத்து, ஜார்ஜியாவில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டது.