செஸ் ஒலிம்பியாட் தொடரில் கடிகாரத்தால் ஏற்பட்ட சிக்கல்!
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் நெதர்லாந்து அணியும் கன்னடா அணியும் மோதின.
உலகின் தலை சிறந்த வீரரான நெதர்லாந்தின் அணிஷ் கிரியை எதிர்த்து கனடாவின் எரிக் ஹான்சன் விளையாடினார், இந்த ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை முதல் 90 நிமிடங்களில் வீரர்கள் 40 நகர்தல்கள் மேற்கொள்ள வேண்டும் அப்படி 40 நகர்தலுக்கு முன்னர் ஒரு வீரருக்கு அவருக்கு வழங்கப்பட்ட 90 நிமிடங்கள் நிறைவடைந்தால் அந்த வீரர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவார், 90 நிமிடங்களுக்குள் 40 நகர்தல்களை வீரர் மேற்கொண்டால் அந்த வீரருக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும்.
இப்படி இருக்கையில் நேற்று நடந்த போட்டியில் நேற்று அனிஷ் கிரிக்கு எதிரான போட்டியில் ,எரிக் ஹான்சன் தன்னுடைய 40வது நகர்வை 90 நிமிடங்களுக்கு பிறகு அழுத்த கடிகாரம் 30.28 என நேரம் காட்டியது அதனால் உடனடியாக போட்டியின் நடுவர் போட்டியை நிறுத்திவிட்டு அணிஷ் கிரி வெற்றி பெற்றதாக அறிவித்தார் இருந்தாலும் இரண்டு வீரர்களுக்கும் இதில் குழப்பம் ஏற்பட செஸ் ஒலிம்பியாட் தொடரின் துணை தலைமை நடுவராக இருக்க கூடிய கோபகுமாரன் சுதாகரன் போட்டியின் இடையே சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து விளக்கமளித்தார். இதனால் ஒலிம்பியாட் அரங்கில் 15 நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.