மயக்கமா, கலக்கமா? – படைப்பாளர் மயங்கிவிழுந்ததால் பாதியில் கைவிடப்பட்ட முக்கியத் தொலைக்காட்சி விவாதம்
அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடித் தொலைக்காட்சி விவாதம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் படைப்பாளர் மயங்கி விழுந்தது அதற்குக் காரணம்.
Talk TV தொலைக்காட்சி ஒளிவழியில் ரிஷி சுனாக்கும் லிஸ் டிரஸும் விவாதித்துக் கொண்டிருந்தபோது ஏதோ விழுவதைப் போன்ற பெரிய சத்தம் கேட்டது.
நிகழ்ச்சி தொடங்கிய அரை மணிநேரத்தில் படைப்பாளர் கேட் மக்கென் (Kate McCann) மயங்கி விழுந்ததில் அந்தச் சத்தம் ஏற்பட்டது.
அந்த நிகழ்ச்சி ஒருமணி நேரம் இடம்பெறவிருந்தது.
மக்கென் மயங்கிவிழுந்தபோது கேமரா லிஸ் டிரஸைக் காட்டியது. அவர் நடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் “கடவுளே” என ஆங்கிலத்தில் சொன்ன நேரத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.
மயங்கி விழுந்த படைப்பாளர் நலமாக இருப்பதாக Talk TV தொலைக்காட்சி நிலையம் அறிக்கையில் தெரிவித்தது. இருப்பினும், விவாதம் தொடரக்கூடாது என்று மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதால் நிகழ்ச்சி பாதியில் கைவிடப்பட்டது.
![]()