சிறுவனின் விரலை உடைத்த செஸ் ரோபோ..! அதிர்ச்சி வீடியோ

ரஷ்யாவில் நடந்த செஸ் போட்டியில், விதிமீறிய நகர்த்தலுக்கு 7 வயது சிறுவனின் விரலை, ரோபோ உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மாஸ்கோ செஸ் ஓபன் போட்டிகள் நடந்தது. கடந்த ஜூலை 19ம் தேதி, கிறிஸ்டோபர் என்ற சிறுவன் ஆண்ட்ராய்டு ரோபோ ஒன்றுடன் செஸ் போட்டியில் மோதியுள்ளார். மாஸ்கோவை சேர்ந்த 9 வயதிற்கு உட்பட்ட 30 செஸ் வீரர்களில் சிறுவனும், ஒருவர் ஆவார். போட்டியின் போது, ரோபோவின் நகர்த்தாமல் காத்திருக்காமல், அடுத்த நகர்த்தலுக்கு சிறுவன் முயற்சி செய்துள்ளார்.

அப்போது ரோபோ, சிறுவனின் விரலை பிடித்து அழுத்தியதில் விரல் முறிந்தது. ரோபோவின் இரும்பு பிடியில் சிக்கிய சிறுவனை, உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஸ் ரோபா பாதுகாப்பு , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாதகங்கள் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘இது வெறும் துவக்கம் தான்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ரஷ்ய செஸ் பெடரேஷன் தலைவர் கூறுகையில், ‘ரோபோ அதனுடைய நகர்த்தலை முடிக்கும் முன்பே, முன்கூட்டியே சிறுவன் நகர்த்த முயற்சித்ததால், விரலை உடைத்துள்ளது இது போன்ற சம்பவம் நடைபெற்றது இதுவே முதல்முறை. பாதுகாப்பு விதிகளை சிறுவன் மீறியதால் நடந்துள்ளது. இது எதிர்பாராத சம்பவம். செஸ் ரோபோ பாதுகாப்பான ஒன்று தான்’ என கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button