40 ஆடுகள் 4 நாட்களுக்கு பின்பு மீட்பு 1
கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடுத்திட்டில் சிக்கித்தவித்த 40 ஆடுகளை 4 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு வீரா்கள் மீட்டனர். வெள்ளப்பெருக்கு கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறப்பட்டது.இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் கடந்த 18-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் 2 கரையும் தொட்டு சென்றது.
அப்போது இதை அறியாமல் வழக்கம்போல் கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்க்க சென்றனர்.ஆற்றில் அதிகஅளவு தண்ணீர் வந்ததால் வௌ்ளத்தில் சிக்கித்தவித்த ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான திருவைகாவூரை சேர்ந்த ராஜேந்திரன்(வயது55), ரவிச்சந்திரனை( 55) விசைப்படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் மேலும் ராஜேந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் மேய்ச்சலுக்்கு கொண்டு சென்ற ஆடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டில் சிக்கின.
தொடர்ந்து 4 நாட்கள் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் ஆடுகளை மீட்க முடியாமலும் ஆடுகள் உயிருடன் உள்ளதா? இல்லையா? என்பது தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.இந்தநிலையில் ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைந்ததன் எதிரொலியாக பாபநாசம் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விசைப்படகுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் திருவைகாவூர் முட்டுவாஞ்சேரி பகுதியில் உள்ள நடுத்திட்டுக்கு சென்றனர்.
40 ஆடுகள் மீட்பு அப்போது அங்கு கடந்த 4 நாட்களாக நடுத்திட்டிலேயே 40 ஆடுகள் நின்றன. இந்த 40 ஆடுகளை தீயணைப்பு வீரர்கள் விசைப்படகுகள் மூலம் மீட்டு திருவைகாவூர் கிராமத்துக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.ஆடுகளை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றிதரிவித்தனர்.