பாஜக சார்பில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் கபடி போட்டி
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 60 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட கபடி போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொண்டு வருவதாக வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி பேசியபோது, “மோதி கபடி லீக்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கபடி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். 5,000 அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. 60,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போட்டிகள் தேசிய விளையாட்டு தினமான 29ஆம் தேதி தொடங்கி, பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இறுதிப் போட்டியை மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பரிசளிப்பு விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு 50,000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு 25,000 ரூபாய், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு 15,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
அதேபோல், மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 லட்சம் ரூபாயும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கும் 10 லட்சம் ரூபாயும் மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது,” என்று கூறினார்.