“ஆடிப்பிறப்பு விழா 2022 “

வணக்கம்,
கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா வழமை போன்று இம்முறையும் எதிர்வரும் ஜூலை மாதம் 24ந் திகதி ஞாயிற்றுக்கிழமை Springvale City Hall மண்டபத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படடுள்ளன.
தமிழர்தம் பாரம்பரிய கலைச்செழிப்பை வெளிக்கொணரும் நாட்டிய நிகழ்வுகள், சிறப்பு நிகழ்வான “ பொன்னியின் செல்வன் ” நாடகம், வளர்ந்தோருக்கான நாடகம், கர்நாடக ராகங்களில் அமைந்த தமிழ் இசை பாடல்கள், களரிப்பயிற்று நிகழ்வு என்று எல்லா வயதினைரையும் கவரக்கூடிய நிகழ்வுகள் அரங்கேற இருக்கின்றன. இத்துடன் கேசி தமிழ் மன்றத்தின் அரையாண்டு சஞ்சிகையான இளவேனில் சஞ்சிகையும் சிறப்பாக வெளியிடப்படவிருக்கிறது.
அது மட்டுமா. வணிக அங்காடி, நாவுக்கு சுவையான ஆடிக்கூழ், கொழுக்கட்டை போன்றவற்றுடன் சுவையான இரவு விருந்தும் வழங்கப்படவிருக்கிறது.
கீழ் உள்ள இனைப்பைப் பயன்படுத்தி உங்களது வரவை உறுதி செய்யவும்.
https://ctm-aadi-pirappu-2022.eventbrite.com.au/
மீண்டும் அறியத் தருகின்றோம்.
இடம்: Springvale City Hall, 397 – 405 Springvale Rd, Springvale VIC 3171
காலம்: ஜுலை 24ந் திகதி ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி.
மேலதிக தகவல்களுக்கு: சத்தியன் (0403 436 970), மதி ( 0412 069 096)
அனைவரும் வருக. கலை கண்டு மகிழ்க.
![]()