கவிதைகள்

என் அன்பிற்கினியவளே!…. ( கவிதை ) …. கிரிதரன்.

அன்பிற்கினியவளே … எனதருமை காதலியே!
“வாலிபம்” … எனும்
“கொஞ்சத்தில்”
உனை
“கொஞ்சிடவே” ஆசை … !
“காதலி” என்றே …
“காமம்” ……… எனும்
“மஞ்சத்தில்”
உனை
“பணிந்திடவே” ஆசை … !
“மனைவி” என்றே …
“மத்தியம்” … எனும்
“வாழ்க்கையில்”
உன்னோடு
“வாழ்ந்திடவே” ஆசை … !
“நாம்” என்றே …
“முதுமை” … எனும்
“வாயோதிகத்தில்”
“நான்”
“தாங்கிடவே” ஆசை … !
“கணவன்” என்றே ..
“வாழ்நாள்வரை”
“உன்னுடன்” …
“உன்னுடன்” மட்டுமே
“பயணித்திடவே” ஆசை … !
“உன்னவன்” என்றே …
முதலவளும்
மூத்தவளும் நீதானே
என் காதலில் … !
என்
அன்பிற்கினியவளே …

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.