ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்றுநடத்த 4 நாடுகள் விருப்பம்
2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்த நான்கு நாடுகள் முனைகின்றன.
ஆஸ்திரேலியா, தென்கொரியா, கத்தார், இந்தோனேசியா ஆகியவை அவை.
எந்த நாடு தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பது அக்டோபரில் தெரிய வரும்.
ஆசியக் கிண்ணப் போட்டிகளைச் சீனா ஏற்றுநடத்தவிருந்தது.
ஆனால் கோவிட் நோய்ப்பரவலைக் காரணம் காட்டி அது மே மாதம் பின்வாங்கியது.
ஆஸ்திரேலியா 2015ஆம் ஆண்டில் ஆசியக் கிண்ணத்தை ஏற்று நடத்தியது.
தென்கொரியா அந்தப் போட்டிகளைச் சுமார் 62 ஆண்டுகளுக்கு முன்னதாக 1960இல் ஏற்றுநடத்தியது.
கத்தார் ஆசியக் கிண்ணப் போட்டிகளை ஏற்கனவே இருமுறை ஏற்றுநடத்தியுள்ளது.
1988ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் அது போட்டிகளை நடத்தியது.
இந்தோனேசியாவில் மட்டும் தான் இதுவரை ஆசியக் கிண்ணப் போட்டிகள் இடம்பெற்றதில்லை.
அக்டோபர் 17ஆம் தேதியன்று ஆசியக் காற்பந்துச் சம்மேளனம் அதன் முடிவை அறிவிக்கும்.