தினமும் சேலை அணியவேண்டும், மாதத்திற்கொருமுறை மட்டுமே Pizza – வித்தியாசமான திருமண ஒப்பந்தத்தோடு மணம் முடித்த தம்பதி
அசாமில் ஒரு திருமணத் தம்பதி வித்தியாசமான ஒப்பந்தங்களோடு மணம் முடித்துள்ளது.
அண்மை ஆண்டுகளில் திருமண நிகழ்வுகளில் ஏராளமான மாற்றங்கள்.
மணமகள் நடனமாடிக்கொண்டே மேடைக்கு வருவது, தம்பதி சகிதமாக நடனமாடுவது என்று தொடங்கித் தற்போது ஒப்பந்தக் குறிப்பில் மேடையிலேயே கையெழுத்திடுவதும் அரங்கேறியிருக்கிறது.
தம்பதி ஒப்பந்தக் குறிப்பில் கையெழுத்திடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. 16 விநாடிகள் நீளம் கொண்ட காணொளி இதுவரை 45 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தக் குறிப்பில் மணமகள் தினமும் சேலை அணியவேண்டும், உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்ல வேண்டும். மணமகன் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவைச் சமைக்க வேண்டும்; 15 நாட்களுக்கு ஒரு முறை மனைவியைக் கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே Pizza சாப்பிட வேண்டும் ஆகியவை உள்ளன.
கணவர், இரவு நேர விருந்துக்கு மனைவியுடன் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். அனைத்து விழாக்களிலும் கண்கவர் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பல ஒப்பந்தங்களோடு மணம் முடித்துள்ளனர் இந்தத் தம்பதி.
இந்த ஒப்பந்தங்களைத் தயாரித்தது தங்கள் நண்பர்கள் என்று மணமக்கள் கூறினர்.
![]()