ரஷ்ய பெண்களுக்கு ஜெர்மனியால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
உக்ரைன் – ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் (plastic surgery) துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பொருள்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
குறிப்பாக ஜெர்மனியிலிருந்து அத்தகைய பொருள்கள் பெரிய அளவில் ரஷ்யாவில் இறக்குமதியாகின்றன. முகத்திலிருக்கும் சுருக்கங்களைக் குறைக்க உதவும் Botox ஊசிகள் இனி கிடைக்கமாட்டாது என்று கவலைப்படுவதாக ரஷ்யப் பெண்கள் சிலர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
ரஷ்யாவில் தயாராகும் அத்தகைய ஒட்டுறுப்புச் சிகிச்சைப் பொருள்கள் குறைந்த தரம் கொண்டவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச சங்கம்(International Society of Aesthetic Plastic Surgery)வழங்கிய தரவுகளின்படி, உலக அளவில் ஆண்டுதோறும் ஆக அதிக ஒட்டுறுப்புச் சிகிச்சைகள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 9ஆவது இடத்தில் இருக்கிறது.