இளம் வயதில் அதிக சாதனை-கறுப்பின பெண்ணுக்கு அமெரிக்காவின் உயரிய விருது

அமெரிக்கா நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான அரச தலைவர் விருது’ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகள் வாயிலாக நாட்டின் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான அரச தலைவர் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இளம் வயதில் அதிக சாதனை
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெறும் நபர்களை வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அரச தலைவர் ஜோ பைடன் பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்த உயரிய விருது, 25 வயதே ஆன அமெரிக்காவின் ஒலிம்பிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டது. கருப்பினத்தை சேர்ந்த சிமோன் பைல்ஸ் 7 ஒலிம்பிக் பதக்கங்கள், உலகளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அதிக தங்க பதக்கங்கள் என இளம் வயதிலேயே அதிக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button