ஐவொரி கோஸ்டில் கோதுமைக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கு மா!
உக்ரைன் போரினால் கோதுமை விலை அதிகரித்திருக்கும் நிலையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவொரி கோஸ்ட் பேக்கரி உற்பத்தியாளர்கள் உள்ளூர் மரவள்ளிக்கிழங்கு மாவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஐவொரி கோஸ்ட் கோதுமை உற்பத்தி செய்வதில்லை என்பதோடு அது ஆண்டுதோறும் பல மில்லியன் தொன் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது. பிரதானமாக பிரான்ஸில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தி நாடுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இருப்பதோடு போர் காரணமாக அந்த நாடுகள் அறுவடையை இழந்துள்ளன. இது உலகளாவிய ரீதியில் முக்கிய பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாகியுள்ளது.
இந்நிலையில் ஐவொரி கோஸ்டின் மிகப்பெரிய உற்பத்திகளில் ஒன்றாக இருக்கும் மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்த பேக்கரி உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
![]()