20 பூனைகளால் கடித்து குதறப்பட்ட உரிமையாளர்.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்!
தான் வளர்த்த பூனைகளாலேயே கொடூரமாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் கோரமாக உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் நடந்திருக்கிறது.
ரஷ்யாவின் bataysk என்ற பகுதியில் உள்ள வீட்டில் இருந்து உயிரிழந்த பெண்ணின் அழுகிய உடலை போலீசார் மீட்டிருக்கிறார்கள்.
இறந்த பெண்ணுடன் உடன் பணிபுரிந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கச் சென்றபோதுதான், அவர் வளர்த்த சுமார் 20 பூனைகளே அவரை தின்று கொன்றுத் தீர்த்திருக்கிறது என தெரிய வந்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தனது வீட்டில் அப்பெண்ணின் சடலம் பூனைகள் சூழ இருந்திருக்கலாம் என போலீசார் கணித்திருக்கிறார்.
மேலும், தனது உரிமையாளரை கடித்துக் கொன்ற பூனைகள் அவர் இறந்த பிறகும் விடாமல் அவரது உடல்பாகங்களை தின்றதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் “இரண்டு வாரங்களாக அந்த பூனைகளுக்கு அதன் உரிமையாளர் எந்த உணவும் கொடுக்காமல் வெளியே சென்றிருக்கிறார். பசியின் வெறியோடு இருந்த அந்த பூனைகள், அப்பெண்ணையே உணவாக மாற்றியிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்கள். இதில் நலமாக இருந்த சில பூனைகள் மீட்கப்பட்டு வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் அந்த புதிய உரிமையாளருக்கு இதற்கு முன்பு பூனைகளால் நேர்ந்த நிகழ்வு குறித்து தெரியப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதனிடையே பிரமாண்டமாக புசுபுசுவென இருக்கும் இந்த Maine Coon வகை பூனைகள் உள்நாட்டிலேயே வளர்க்கப்படக் கூடியவையே. இது அமெரிக்காவின் Maine-ல் தோன்றியதாம்.
ரஷ்யாவில் நடந்தது போன்று கிழக்கு லண்டனில் உள்ள Hampshire நகரிலும் Janet Veal பெண் ஒருவர் , தன்னால் வளர்க்கப்பட்ட பூனைகளால் பாதி உண்ணப்பட்டு இரண்டு மாதங்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்தார்.
அதன் பிறகு ஜெனெட்டின் உடல் அவரது வீட்டின் கிச்சனில் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவருடன் கூட உயிரோடும், பிணமாகவும் இருந்த சில பூனைகள் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே செல்லப்பிராணிகளை வளர்ப்போர், அதற்கான கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த அறிவுரைகளை பெற்று செயல்பட வேண்டும் என போலீசார் தரப்பிலும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.