பலதும் பத்தும்
ஆகப்பெரிய குத்துச்சண்டை வகுப்பு நடத்தி உலகச் சாதனை படைத்த மெக்சிகோ சிட்டி
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஓர் உலகச் சாதனை.
அந்நகரம் ஆகப்பெரிய குத்துச்சண்டை வகுப்பை நடத்திச் சாதனை படைத்திருக்கிறது.
நகரின் முக்கிய சதுக்கம் நேற்று முன்தினம் (18 ஜூன்) மெக்சிகோ தேசியக் கொடியிலுள்ள வண்ணங்களால் மிளிர்ந்தது.
சிவப்பு, வெள்ளை, பச்சை ஆடைகளை அணிந்திருந்த கிட்டத்தட்ட 14,300 பேர் வகுப்பில் கலந்துகொள்ளத் திரண்டிருந்தனர்.
உள்ளூர்க் குத்துச்சண்டைப் பிரபலங்கள் வழிகாட்ட அவர்கள் உற்சாகத்துடன் பயிற்சி செய்தனர்.
அதன் பயனாகப் புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதற்குமுன் மாஸ்கோ 2017ஆம் ஆண்டில் அந்தச் சாதனையைப் படைத்திருந்தது.