அதிக சதம், அதிரடி பவுண்டரிகள்…ஒரு போட்டியில் பல சாதனைகள் படைத்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது. 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.
இதனால் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த போட்டியில் 162 ரன்கள் குவித்த பட்லர் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில், முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது.