பலதும் பத்தும்

செவ்வாய்க்கோளில் உயிர்வாழும் இனம் இல்லை… மனிதக் குப்பை தான் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கோளில் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு…

அது உயிர் வாழும் இனம் அல்ல… குப்பை!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் செவ்வாய்க்கோளுக்கு அனுப்பிய Perseverance எனும் ஆய்வு வண்டி அந்த மனிதக் குப்பையைக் கண்டுபிடித்துள்ளது.

வழக்கமான சோதனைகளின்போது அந்தக் குப்பை தென்பட்டது.

Perseverance ஆய்வு வண்டி செவ்வாய்க்கோளைச் சென்றடையும்போது அதிக வெப்பநிலையிலிருந்து அதைப் பாதுகாப்பதற்காக அதன் மீது வெப்பப் போர்வை ஒன்று போர்த்தப்பட்டதாக First Post செய்தி நிறுவனம் கூறியது.

அந்த வெப்பப் போர்வை தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குப்பையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் Perseverance தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அது தென்பட்டதாக First Post குறிப்பிட்டது.

அது அவ்வளவு தூரம் எப்படிச் சென்றது என்பது புதிராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Loading