உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி… அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தனது மனைவியுடன் உடலுறவு கொண்டபின் தனக்கு குறுகியகால ஞாபக மறதி ஏற்பட்டுவிட்டதாக 66 வயது நபர் ஒருவர் மருத்துவமனைக்கு ஓடிய விசித்திர சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.
அயர்லாந்து மருத்துவ இதழ் இதுகுறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த குறுகிய கால ஞாபக மறதிநோயை தற்காலிக உலகளாவிய மறதி( Transient Global Amnesia -TGA)என்று குறிப்பிட்டிருக்கிறது. இது கால்-கை வலிப்பு அல்லது பக்கவாதம் போன்ற பொதுவான நரம்பியல் நோய்களால் ஏற்படவில்லை என்று விளக்கமளித்திருக்கிறது மாயோ க்ளினிக்.
அயர்லாந்தைச் சேர்ந்த அந்த நபர் தனது மனைவியுடன் பாலியல் உடலுறவு கொண்ட 10 நிமிடம் கழித்து தனது செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார். அப்போது முந்தைய நாள்தான் தனக்கு திருமண நாள் எனவும், அதை தான் மறந்துவிட்டதாகவும் தனது மனைவி மற்றும் மகளிடம் கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அதற்கு முந்தைய நாள் மாலைதான் தனது திருமண நாளை விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். மனைவியும், மகளும் அதுகுறித்து எடுத்துக்கூறியும் அவருக்கு எதுவும் நினைவில் வரவில்லை என்று தெரிகிறது. அப்போதுதான் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை நடந்த அனைத்தையும் மறந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. உடனே அவர் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்.
![]()