நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் 2 மகன்களுடன் பெண் கொடூர கொலை

திருப்பூர் மாவட்டம் சேடர்பாளையம் மெட்டுவா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் 50 வயது மதிக்க ஒருவருடன், பெண் மற்றும் 2 சிறுவர்கள் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். அந்த நபர் தன்னுடன் வந்த பெண்ணை தனது மனைவி முத்துமாரி (வயது 35) என்றும், சிறுவர்கள் தனது மகன்கள் தரணிஷ் (9), நித்திஷ் (6) என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் கடந்த 3 வாரமாக அந்த வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டிக்கு முத்துமாரியும், அவருடைய 2 மகன்களும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீடு முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது. போலீசார் விசாரணை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் பத்மாவதி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துமாரியுடன் தங்கி இருந்த நபரை காணவில்லை.

அந்த ஆசாமிதான் முத்துமாரியையும், அவரது 2 மகன்களையும் அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. 3 பேரின் தலையை பிடித்து தரையில் மோதி அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும், இந்த கொலை நள்ளிரவில் அல்லது அதிகாலை நேரத்தில் நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலன் இதையடுத்து வீட்டு உரிமையாளர் பத்மாவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பத்மாவதிக்கு அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து முத்துமாரியிடம் கேட்டுள்ளார்.

அப்போது முத்துமாரி, நாங்கள் விரும்பி ஒன்றாக சேர்ந்து வாழ்கிறோம் என்றும், முத்துமாரியின் சொந்த ஊர் திருவாரூர் என்றும், மேலும் 1 மாதம் மட்டும் வாடகைக்கு வீடு கொடுக்குமாறும், அதன் பின்னர் வேறு இடத்திற்கு சென்று விடுவோம் என்றும் முத்துமாரியும், அந்த நபரும் கூறியதாக போலீசாரிடம் பத்மாவதி தெரிவித்துள்ளார். இதனால் முத்துமாரியுடன் தங்கி இருந்தவர் அவருடைய கள்ளக்காதலனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவரது பெயர் கார்த்தி என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இருப்பினம் அவரை பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. நெஞ்சை பதற செய்யும் இந்த 3 கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *