கவிதைகள்
என் மன்னன் மயங்கும் மல்லிகை!… (கவிதை ) ….. தமிழ்மகள் பரா.
மன்னன் வரவுக்காக
காதலோடு காத்திருக்கும்/
மங்கையவள் கைகளில்
மகிழ்வோடு கொடுக்கும்/
மல்லிகைப் பூவும்
அல்வாவும் மாலையில்/
மனதோடு உறவாட
ஈர்க்கும் சுகந்தமிது /
ஊடலையும் கூடலாக்கும்
அன்பின் ஊடகமாம் /
மல்லிகை என்
மன்னன் மயங்கும்/
மூச்சோடு சுவாசிக்கும்
வாசமுள்ள மலரதைச் /
சூடியே அழகு
காட்டும் நங்கையிவள் //
இவள்
தமிழ்மகள் பரா