பலதும் பத்தும்

உணவு வழங்காத மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்!

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, தானேயின் ரபோடி பகுதியில் வசிப்பவர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல், 76. இவரது 42 வயது மருமகள், நேற்று முன்தினம் காலை 11:30 மணி வரை அவருக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பாட்டீல், தன் கைத்துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுள்ளார். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள், காயமடைந்த மருமகளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக, பாட்டீலின் மற்றொரு மருமகள் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பாட்டீல் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.