கவிதைகள்

மொந்தை பழசு கள் புதுசு!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

மொழியறியா மனிதரிடம்> தமிழில் கதைத்தால்> மொழியறியா மனிதரிடம்> தமிழில் கதைத்தால்> கவியறியா மாந்தரிடம்> கவிதை படித்தால்> கவிதை படித்தால்>> மொழியறிந்த மனிதருமே> தமிழை வெறுத்தார்> தமிழ்சுவையறிந்த மாந்தருமே> சுவையை மறந்தார்> சுவையை மறந்தார்>> முத்தமிழில் அழகிருந்தும்> மூடி மறைத்தார்> கூறவந்த பொழுதில்> குரல்வளையை நெறித்தார்> முத்தமிழில் அழகிருந்தும்> மூடி மறைத்தார்> கூறவந்த பொழுதில்> குரல்வளையை நெறித்தார்> வாய்ப்புபல இருந்திடினும்> வழியை அடைத்தார்> வளமான நம்மொழியை> வஞ்சனை செய்தார்>> இலக்கிங்கள் பலவிருந்தும்> ஏற்க மறுத்தார்>> இலக்கியத்தை படிக்குமுன்னே> தமிழை இகழ்ந்தார்> தமிழை இகழ்ந்தார்>> மொழியறியா மனிதரிடம்> தமிழில் கதைத்தால்>> மொழியறியும் முன்பேயவர்> தமிழை வெறுத்தார்> தமிழை வெறுத்தார்>> தமிழ்பெருமை பேசிப்பேசி> தம்மை வளர்ப்பார்> தம்பெருமை குறையுமென்றால்> தமிழை ஒழிப்பார்> தமிழ்பெருமை பேசிப்பேசி> தம்மை வளர்ப்பார்> தம்பெருமை குறையுமென்றால்> தமிழை ஒழிப்பார்>> இருண்டிருந்த காலமது> இன்றும் தொடருதே> தொடர்ந்து வந்தபோதுமதை> தவிர்க்கவில்லையே>> மொழியறியா மனிதரிடம்> தமிழில் கதைத்தால்> கவியறியா மாந்தரிடம்> கவிதை படித்தால்> கவிதை படித்தால்>> மொழியறியா மனிதரிடம்> தமிழில் கதைத்தால்> கவியறியா மாந்தரிடம்> கவிதை படித்தால்> கவிதை படித்தால்– சங்கர சுப்பிரமணியன்.>

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.