ஜட்டி உள்ளே நேர்-கேஸ்(உயிர் கொல்லி) நஞ்சை வைத்த புட்டின்!
ரஷ்ய எதிர் கட்சி தலைவர் நவலின் கொலை முயற்ச்சி, யாவரும் அறிந்த விடையம். அவருக்கு தேனீரில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டதாகவே இன்று வரை பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல என்று தற்போது வெளிவந்துள்ள செய்திகள் ஊர்ஜிதம் செய்கிறது. எதிர் கட்சி தலைவர் நவலின், 2020 ஆகஸ்ட் 18ம் திகதியில் ரஷ்யாவில் உள்ள சைபீரிய மாநிலத்திற்கு சென்று, அங்கே ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். அந்த வேளை FSB என்று அழைக்கப்படும், ரஷ்யாவின் உளவு துறை, அதிகாரிகள் சென்று ஹோட்டலில் உள்ள CCTV கமராக்களை செயல் இழக்கச் செய்துள்ளார்கள். பின்னர் அவர்கள், லேன்றி(துணிகளை துவைத்துக் கொடுக்கும் சேவையில் உள்ள பெண் ஒருவரோடு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்கள்) குறித்த பெண்ணிடம் நேர்- சோக் என்று அழைக்கப்படும் ஒரு வகையான கடும் விஷத்தை கொடுத்து. அதனை எதிர்கட்சி தலைவரின் ஜட்டியில் தடவி உள்ளார்கள். குறித்த ஒரு வெப்ப நிலைக்கு மேல் சென்றால் மட்டுமே அதில் உள்ள நச்சு தன்மை, அக்டிவ் ஆகும். அது உடலில் பரவ ஆரம்பித்து. மூச்சடைப்பை ஏற்படுத்தி ஆளைக் கொல்லும். அதற்கு…
குறைந்தது 2 மணி நேரம் பிடிக்கும். எனவே எதிர்கட்சி தலைவர் சைபீரியாவில் இருந்து மொஸ்கோ செல்லும் நாளில் இந்த ஜட்டியை அவர் போட வேண்டும் என்று கணக்குப் போட்டுள்ளது ரஷ்ய உளவுத் துறையான FSB. அது போலவே 20ம் திகதி , அவர் மொஸ்கோ புறப்பட்ட வேளை, அவர் நஞ்சு தடவிய ஜட்டியை போட்டுக்கு கொண்டு தான் ஏர் போட் சென்றுள்ளார். அதற்கு முன்னதாக அவர் தேனீர் குடித்து விட்டு விமானத்தில் ஏறியுள்ளார். சைபீரியாவில் இருந்து மாஸ்கோ செல்ல 3 மணி நேரம் ஆகும். எனவே எதிர் கட்சி தலைவர் கதை விமானத்தினுள் முடிந்து விடும் என்று FSB கணக்குப் போட்டது. ஆனால் அங்கே தான் அவர்கள் கணக்கு சரியாக வேலை செய்யவே இல்லை. விமானம் புறப்பட்டு சரியாக 1 மணி நேரத்தில் கடும் வலியால் துடித்த எதிர்கட்சி தலைவர் நவலின், மூச்சு எடுக்கவும் திணறினார். இதனைப் பார்த்த விமானி…