சிப்ஸை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விசித்திர பெண்!
இன்றைய நவீன உலகில் துரித உணவுகளை சாப்பிட்டு பலரும் மருத்துவமனை நாடுகிறார்கள். ஆனால், இங்கு ஒரு பெண் கிட்டத்தட்ட 22 வருடங்களாக இதுபோன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். லண்டன் கேம்பிரிட்ஜ் மாகாணத்தை சேர்ந்தவர் சம்மர் மோன்ரோ(25). இந்த பெண் ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
FRFID என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் இவர்,கடந்த 22 வருடங்களாக காய்கறிகள், பழங்கள் போன்ற எதையும் உண்ணாமல் சிக்கன் நக்கெட்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற துரித உணவுகளையே உணவாக உட்கொண்டு வருகிறார்.
இந்த FRFID என்பது ஒரு வகையான உணவு கோளாறு நோயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவின் சுவைக்கு மட்டுமே அடிமையாகிவிடுவார்கள்.
அந்த உணவை தவிர வேற உணவை இவர்கள் எப்போதும் உண்ணமாட்டார்களாம். இந்த நிலையில், இந்த பெண் காலையில் உணவை எப்பொழுதும் தவிர்த்துவிட்டு மதியம் வால்கர் க்ரிஸ்ப்ஸ் சிப்ஸ்களையும், இரவு உணவாக ஆறு அல்லது எட்டு பர்ட்ஸ் ஐ சிக்கன் நக்கெட்சுகளையும் சாப்பிடுவாராம்.
அப்படியே அந்த உணவுகளை சாப்பிட்டாலும் இவரது உடல் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. சில ஹிப்னோதெரபிஸ்டுகளும் முயன்றும் கூட இவரை சாதாரண உணவை உண்ணவைக்க முடியாமல் தோற்று போயுள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் மிகவும் மிருதுவான உணவை தான் உண்ணுகின்றேன், அவை மிகவும் மொறுமொறுப்பாக சுவையாகவும், உண்ணுவதற்கு எளிதாகவும் இருக்கிறது.
ஆனால் காய்கறிகள், பழங்கள் போன்றவை இவ்வாறு இல்லை, அவை உண்பதற்கும் எளிதாக இல்லை என தெரிவித்தார். இதுபோன்ற உணவுகளை அவர் உண்ணுவதால் அவரின் உடல் எடை சமசீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாகவே உள்ளது.