உக்ரைன் மக்களின் உயிரை காப்பாற்ற கூகுள் தொடங்கியுள்ள புதிய சேவை!
இந்த சேவை உக்ரைனில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கூகுள் தெரிவிக்கையில், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். இதனால் உக்ரைன் அரசுடன் இணைந்து இந்த சேவையை தொடங்கியிருக்கிறோம்.
பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உக்ரைனில் நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை அனுப்புகிறோம் என தெரிவித்துள்ளது.இந்த சேவை உக்ரைனில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.