இன்னொரு ஜோசப் ஸ்டாலினா புடின்!…. ஏலையா க.முருகதாசன்.
இந்தக் கட்டுரை போர் சூழ்நிலையையும்,சமகால போர்ச் சூழ்நிலைக்கான ஏற்பாட்டளர்களைப் பற்றியதுமாகும்.
உலகை ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பேராசை கொண்டவர்களாக முடியாச்சி மன்னர்களிலிருந்து, அந்நிலை நீங்கிய சனநாயக வழியமைந்த அரசியலிலும்கூட உலகை ஆளும் ஆசை நாடுகளின் அதிபர்களுக்கு இருந்து கொண்டுதான் வருகின்றது.
உலகநாடுகள் பொதுவுடமைக் கொள்கை, சனநாயக் கொள்கை என இரண்டு சிந்தாந்த கோட்பாட்டுக்கமையவே ஆட்சிகளை நடத்தினாலும், சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றும் நாடுகளில்கூட சோசலிஸ,பொதுவுடமைச் சிந்தாந்த வழிமுறைகள் கலந்திருப்பது போல பொதுவுடமைச் சிந்தாந்த கொள்கையின்படி ஆட்சி நடத்தம் நாடுகளில்கூட கையிறின் அளவை கொஞ்சம் விட்டுக் கொடுப்பது போல சனநாயக வழிமுறையினையும் பின்பற்றுவதுண்டு.
முதலாவது அளவுக்குமீறிய சனநாயக உரிமையினால் மனிதர்கள் எல்லைமீறி நடப்பார்களாயின் அங்கு அவர்களை சட்டங்களை உருவாக்கி சனநாயக அலகிலிருந்து விலகிச் செல்லாமல் மக்களை அது கட்டுப்படுத்தும்.
ஆனால் பொதுவுடமைச் சித்தாந்த கோட்பாட்டைக் கடைப் பிடிக்கும் நாடுகள், தனிமனிதர்களோ அல்லது குழுக்களோ தாம் செல்வந்தர்களாக இருப்பதற்கு சாதாரண குடிமகனின் அத்தனை நலன்களையும் உறிஞ்சுபவர்களாக இருப்பதைத் தடுப்பதற்காகவே பொதுவுடமைத் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதாக வெளியே சொல்லிக் கொண்டாலும் மக்களை தமது கொள்கைகேற்ப வடிவமைப்பதில் பொதுவுடமைக் கோட்பாட்டினை மேற்கொண்ட நாடுகள் செயல்படுகின்றன.
இதை எளிய உதாரணத்திற்கூடாக விளங்கப்படுத்தலாம்.இயல்பான நிலையில் ஒரு மரத்தில் காய்க்கும் உருவமுள்ள ஒரு காயை தான் விரும்பிய வடிவத்தை உலோகத்தில் செய்து அவ்வுலோக வடிவிற்குள் அதனை செலுத்தி வளரவிடும் போது அக்காயானது இயல்பாக இயல்பான வடிவத்தைவிட்டு உலோக வடிவத்திற்குரிய வடிவமைப்புக் காயாக தோற்றமளிக்கும்.
அது போன்றதே பொதுவுடமைக் கொள்கை கொண்ட நாடுகள் தமது மக்களின் அன்றாட வாழ்க்கையைக்கூட தாம் முடிவெடுத்த கொள்கை;கு ஏற்றவாறு இருக்க வேண்டுமென அதனை மக்கள் மிது திணிக்கிறார்கள் அல்லது நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இது ஒரு தனமனித சர்வாதிகாரியாலும் அல்லது கட்டமைக்க ஒரு குழுவினராலும் மேற்கொள்ளப்படுகின்றது.
தாம் வடிவமைக்கப்பட்டுள்ளோம் என்பதை அறியாத மக்கள் சனநாயகம் பற்றியோ தனிமனித சுதந்திரம் பற்றியோ உணராது அந்த வடிவமைப்புக்கு இசைவாக்கம் பெற்றுவிடுகிறார்கள்.
இன்று உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருக்கும் ரஸ்யாவின் புடின் இத்தகு கடுமையான ஈவிரக்கமற்ற இறுக்கமான தன்மையுடன் போருக்கான ஏற்பாட்டை உடனடியாகச் செய்யவில்லை.
இது ரஸ்யா என்ற முன்னைய சோவியத் ஒன்றியத்தை தனது கைக்குள் வைத்திருந்த லெனின்,யோசப் ஸ்டாலின்,குருசோவ்,பிரஸ்நோவ்,கோர்பச்சோவ்,யல்ஸ்ரின் என்பவர்களின் ஆட்சி முறையைக் கவனித்து அவர்களைவிட தான் வல்லமை பொருந்திய தலைவனாக வேண்டுமென்ற எண்ணத்துடன் செயல்பட்டு இன்றைய ரஸ்யாவின் சனாதிபதியான புடின் ஒரு பேராசை பிடித்த சர்வாதிகாரியாக உருவெடுத்துள்ளார்.
பெரும் நிலப்பரப்பைக் கொண்டும், இன்று சுதந்திரமுள்ள நாடுகளாக பிரிந்துள்ள பல பிராந்தியங்களைக் கொண்ட வல்லமை பொருந்திய சோவியத் ரஸ்யா என்ற பெயர் கொண்ட நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு அருகிலிருக்கும் நாடுகள் 1991இல் சுதந்திர நாடுகளாக பிரிந்து சென்றன.
அன்றைய சனாதிபதியாக இருந்த கோர்பச்சோவின்; ஆட்சிக் காலத்திலேதான் இப்பிரிவு இடம்பெற்றது.அதே போலப் பொதுவுடமைக் கொள்கை நாடாக இருந்த கிழக்கு யேர்மனி மேற்கு யேர்மனியின் அதிபராக இருந்த கெல்மெட் கோலின் காலத்தில் (கார்த்திகை 9, 1989 )மேற்கு யேர்மனிக்கும் கிழக்கு யேர்மனிக்குமிடையில் இருந்த பெரும் தடுப்புச் சுவர் மக்களால் அடித்துடைத்து நீக்கப்பட்டது.1990 ஐப்பசி 3இல் இரு நாடுகளும் ஒரே பெயரான யேர்மனி என்ற பெயர் கொண்ட ஆட்சிமைக்குட்பட்டது .
1989 கார்த்திகை மாதம் பேர்லின் சுவர் தகர்க்கப்பட்ட போது அங்கிருந்த மக்கள் ஒரு புழுக்கத்தில் இருந்து மீண்டதற்கு ஒப்பான மகிழ்ச்சியுடன் மேற்கு யேர்மனிக்குள் கிடைக்கும் வாகனங்களில் வந்து கொண்டிருந்தவர்கள்,புதிய காற்றை சுவாசிப்பது போல அவர்களின் முகங்கள் இருந்தன அப்படி வந்தவர்கள்,கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குகையில் வாழைப்பழங்களையே மிகுந்த ஆர்வத்துடன் வாங்கினார்கள்.அப்படியானால் கிழக்கு யேர்மனியில் வாழ்ந்த மக்கள் வாழைப்பழங்களையே காணாதவர்களா என மேற்கு யேர்மனி மக்கள் வியப்படைந்தார்கள்.வியப்பையும் மீறி கவலையடைந்தார்கள்.அந்த மக்களுக்காகப் பரிதாபப்பட்டார்கள்.
இறக்குமதி பொருட்களை விரும்பாத நாடாகவும் அவற்றிற்கு தடை விதித்த நாடாகவும் கிழக்கு யேர்மனி இருந்திருக்கிறது.
நாங்கள் வகுத்த பாதையிலேதான் உங்கள் வாழ்வு இருக்க வேண்டும்.நாங்கள் வைத்திருக்கும் பொதுவுடமைக் கோட்பாட்டுப் பாத்திரத்திற்குள்தான் உங்கள் வாழ்வு இருக்க வேண்டும் என்ற தனிமனித சர்வாதிகார போக்காகவே பொதுவுடமைக் கொள்கை மக்கள் மீது திணிக்கப்பட்டது.
பேர்லின் சுவரைத் தாவிக் குதித்து மேற்கு யேர்மனிக்கு வர முயற்சித்த பலர் சிறைபிடிக்கப்பட்டனர், சுட்டும் கொல்லப்பட்டனர்.
வுhர்சோ ஒப்பந்த நாடுகளில் ஒன்றாக இருந்த கிழக்கு யேர்மனியில் ,சோவியத் ஒன்றியத்தின் உத்தரவுகளே நடைமுறைப்புடத்தப்பட்டன.
பொதுவுடமைக் கொள்கையைக் கொண்ட நாடுகளுக்கு தானே ஏக தலைவன் என நினைத்துக் கொண்ட சோவியத் ஒன்றியத்தை வழிநடத்தி வந்த அதிபர்கள் சனநாயக வழிமுறை ஆட்சி மனிதகுலத்திற்கே விரோதமான சைத்தான் என்பது போல ஒரு மாயையை தமது நாட்டு மக்களிடம் ஏற்படுத்தினார்கள்.
பொதுவுடமைக் கொள்கையின் உள்ள சிறிதளவு தனிமனித விருப்பு என்ற ஈரப்பதனிலைகூட, பொதுவுடமை நாடுகளை ஆண்ட ஆட்சியாளர்களால் வறட்சி நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது..அதில் ஏகோபித்த ஏதெச்சாதிகார சர்வாதிகாரத்தடன் மக்களை வண்டியில் பூட்டிய மாடுகளாக அவற்றின் மூக்கணாங் கயிற்றை தமது கையில் வைத்திருந்தனர் சோவியத் ஒன்றியத்தை ஆண்ட தலைவர்கள்.
ஆட்சியாளர்களின் உருவங்கள் மாறினவேயன்றி மக்களை அடக்கியாளும் முறைமை மாறவே இல்லை.
சோவியத் ஒன்றியத்தை ஆண்டவர்களில் லெனினுக்குப் பிறகு வந்த யோசப் ஸ்டாலின்,குருசேவ்,இப்பொழுது புடின் என இவர்கள் மோசமான இறுக்கமான ஈவிரக்கமற்ற சர்வாதிகாரிகளே.
யோசப் ஸ்டாலினின் ஈவிரக்கமற்ற குணத்தைக் கண்டு கொண்ட லெனின் தனக்குப் பிறகு லியோன் டிராஸ்கிதான் சோவியது ஒன்றியத்தின் அதிபராக வரவேண்டும் என்று விரும்பி அதனை அரசாட்சி ஆவணப்படுத்தல் பத்திரத்தில் எழுதியும் வைத்திருந்தார்.
லெனின் பொலிரிக்கல் ரெஸ்ற்றமென்ற் என்ற தமது அரசியல் விருப்பு ஆவணத்தில் அதனை எழுதி வைத்ததுடன் ஈவிரக்கமற்ற யோசப் ஸ்டாலினை பொதுவுடமைக் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் விரும்பினார்.
1924இல் லெனின் காலமானபின்,லெனின் எழுதி வைத்த அரசியல் நிலைப்பாட்டு ஆவணம் யோசப் ஸ்டாலினால் இருட்டடிப்புச் செய்ஈயப்பட்டது.தலைமை ஆட்சிக் குழுவின் இரு முக்கிய உறுப்பினர்களாகிய லே காமனேவே;,கிரிகோரி யினோவியோவ் ஆகியோருடன் இணைந்து முக்கூட்டணி அமைத்து ஆட்சியைக்; கைப்பற்றித் தொடர்ந்தார்.
இவர் காலத்தின் ஆட்சியை கொடுமைக்காரனின் ஆட்சி என வர்ணித்தனர்.அடுத்து எதேச்சாதிகார ஆணவம் பிடித்த ஆட்சியாளனாக வந்தவர் குருசோவ்.கிரம்ளினிலிருந்து சுவிட்சை அமத்தினால் அமெரிக்கா இல்லாமல் போய்விடும் என்று இவர் ஆட்சி செய்யும் காலம்வரையும் அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே பயமுறுத்தி வந்தார்.
தன்மீது தாக்குதல் தொடுக்கப்படுமானால் தன்னைச் சுற்றியுள்ள ஒரு மைல் பிரதேச சுற்றளவு நாசமாவதுடன் அங்கே எதிர்காலத்தில் உயிர்கள் மட்டுமல்ல, புல்பூண்டுகள்கூட முளைக்காது என அச்சுறத்தி வந்தார்.அவர் பற்றி விதந்துரைக்கையில் எப்பொழுதும் அவர் தன்னைக் காத்துக் கொள்வதற்காக தன்னுடலில் மிகச் சிறிய நுணுக்கமான வெடிகுண்டொன்றை தனது உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்தார் எனக் கூறிவந்தனர்,பத்திரிகைகளில் இவை செய்திகளாகவும் வந்தன.
அது மட்டுமல்லாமல் குருசோவ் காலத்தில் சோவியத் ஒன்றியம் என்றால் அது இரும்புத்திரை கொண்ட நாடு எனப் பெயரும் பெற்றுக் கொண்டது.தனது நாட்டுக்குள் இறக்குமதிப் பொருட்கள் வருவதை முற்றுமுழுதாக வெறுத்து தடுத்த குருசோவ் பொருட்களுடன்; தனிமனித சுதந்திர அலகுகளைக் கொண்ட சனநாயக சிந்தாந்த கோட்பாடுகளும்; தனது நாட்டு மக்களை வந்தடைந்துவிடக் கூடாதென்பதற்காக,சிறிதளவு இறக்கமதித் தடையை இளக்கினாலும் ஆட்சிக்கே ஆபத்தாகிவிடுமென்பதற்காக „கொஞ்சமாக எனது நாட்டின் யன்னலைத் திறந்தால்கூட பூச்சிகளும் தூசிகளும் வந்துவிடும் „ என்று பலமுறை கூறியிருக்கிறார்.
குருசோவ் பூச்சிகளென்றும் தூசிகளென்றும் சனநாயக ஆட்சி முறைமையையே ஒப்பிட்டுச் சொன்னார்.அவர் பார்வையில் சனநாயகம் என்பது பூச்சிகளாகவும் தூசிகளாகவும் கருதப்பட்டது.
இன்று ஒரு இறைமையுள்ள சுதந்திர நாடான உக்ரைனுக்குள் , ரஸ்யாவின் ஆட்சித் தலைமையை வைத்திருக்கும் ரஸ்ய சனாதிபதி புடின் தனது இராணுவத்தை அனுப்பி போர் தொடுத்திருப்பது ஏற்க முடியாத ஒரு பெரும் குற்றமாகும்.
யோசப் ஸ்டாளின்,குருசோவ்:, யல்ஸ்ரின் ஆகியோரின் (யல்ஸ்ரின்,சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து போக விரும்பிய நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்த அன்றைய சனாதிபதியான கோர்பச்சோவை சிறையில் அடைத்தவர்)மொத்த உருவாக உருவெடுத்திருப்பவர்தான் ரஸ்ய சனாதிபதி புடின்.
தான் எதிர்காலத்தில் ஐரோப்பாவிற்குள் எடுக்கப் போகும் சர்வாதிகார நடவடிக்கைக்காக கட்டியம் கூறுவது போல தொடர்ந்து தானே இருபது ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு சனாபதியாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்.
மக்கள் தமது நாடு சமூக பொருளாதார நிலைகளில் மேம்பட வேண்டுமென்பதற்காக அவரை அங்கீகரித்தார்களேயன்றி,நாடுகளைப்: பிடிக்கும் பேராசைக்காரனுக்கு வாக்களிக்கவில்லை என கருத இடமுண்டு.
ஒரு சுதந்திருமுள்ள நாடு தான் எந்தெந்த நாடுகளோடு, எந்தெந்த அமைப்புகளோடு இணைய வேண்டும் என அவர்கள் முடிவெடுப்பதற்கு அவர்களுக்கு பூரணமான உரிமையுண்டு.
வார்சோ ஒப்பந்த நாடுகளின் தலைமைத்துவத்தை வைத்திருக்கும் தான,தனது எல்லை நாடான உக்ரைன் நேட்டேவில் இணைவதை தடுப்பதற்கான காரணமும் அதற்காக போரைத் தொடுத்திருப்பதும் சனநாயத்துக்கு விரோதமான செயல் மட்டுமல்ல, தன்னைக் கேட்பார் யாரும் இல்லையென்றோ யாருமே கேட்கக்கூடாதென்ற தன்னிச்சைச் செயல்பபாடாகும்.
நாடுகள்: என்பன தமது குடிமக்களுக்கு சிறப்பான வாழ்வைக் கொடுப்பதுடன் அவர்களை மேன்மையான மக்களாக வழிநடத்தவும் வேண்டும் அதுவே மக்களாட்சியாகும்.
அபரிதமான முப்படைகளையும்,ஆயுதங்களையும்,அணுவாயுதங்களையும் வைத்துக் கொண்டு எனது சொல்படி நட என உக்ரைனின் மீது புடின் போர் தொடுத்திருப்பது மிக மிக பெரும் போர்க் குற்றமாகும்.அணுவாயுதப் போரைத் தொடங்குவேன் என புடின் மிரட்டுவது அல்லது அது நோக்கி நகர முயல்வது மனிதகுலத்திற்கே தீங்கிழைப்பதற்கு ஒப்பாகும்.புடின் மனிதகுலத்திற்கெதிரான விரோதியேதான்.
உக்ரைன் மீதான போரை ஒரு வெள்ளோட்டமாகக் கொண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகளை மிரட்டி ரஸ்யாவோடு இணைத்துக் கொள்ளும் பெரும் திட்டமே இப்போர் எனக் கொள்ளலாம்.
பிரிந்து சென்ற நாடுகளுக்குள் உக்ரைன் முப்படைகளின் பலத்தினையும் பொருளாதாரத்தினை வளம்படுத்தும் பெறுமதிமிக்க கனிம வளங்களையும் கொண்ட நாடாகும்.உக்ரைன் நேட்டோவுடன் சேர்வதைத் தடுப்பதற்கே இந்தப் போர் என்பதற்கப்பால் உக்ரைனின் பொருளாதார வளங்களை அபகரிப்பதற்கே வலிந்து உக்ரைன் மீது தொடுத்த போர் எனக் கருத இடமுண்டு.
பலமிக்க ஒரு நாட்டைக் கையகப்படுத்தினால் வலிமைகுறைந்த நாடுகளை வெகு சுலபமாக இணைத்துக் கொள்ளலாம் அடிமைப்படுத்தலாம் என்பதுகூட புடினின் திட்டமாகும்.
அது மட்டுமன்றி நேட்டோ நாடுகளையும்,ஒரு பேரரசாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் மிரட்டி ரஸ்யா உலகின் தலைமைத்துவ நாடு என நிலைநிறுத்த முயற்சிப்பதும் இந்தப் போருக்கான காரணமாகும்.
புடின் போன்ற மோசமான உளவியல் சிக்கல் கொண்ட சர்வாதிகாரியின் விருப்பம் சிதைக்கப்படுவதன் மூலமே சனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.