சிறப்பு செய்திகள்
சிங்கப்பூரின் குற்றவியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்க முயலும் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிராக எச்சரிக்கை
சிங்கப்பூரின் குற்றவியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்க முயலும் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிராக உள்துறைத் துணையமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) எச்சரித்துள்ளார்.
மரண தண்டனையை எதிர்நோக்கும் 17 கைதிகள் சமர்ப்பித்த நீதிமன்ற விண்ணப்பம் குறித்து நடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை எழுப்பிய கேள்விக்கு டாக்டர் ஃபைஷல் பதில் அளித்தார்.
நாட்டின் குற்றவியல் அமைப்பில் மரண தண்டனை, தொடர்ந்து பொருத்தமானதாகவும் முக்கியமான ஒன்றாகவும் விளங்குவதாக அவர் சொன்னார்.
கடுமையான குற்றங்கள் நடப்பதை அது தடுக்க உதவுவதுடன் சிங்கப்பூரர்களையும் சிங்கப்பூரையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அது துணைபுரிவதாக அவர் குறிப்பிட்டார்.
கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஆதரிப்பதாக டாக்டர் ஃபைஷல் கூறினார்.