பூக்களை வைத்து உக்கிரைனுக்கு மறை முகமாக ஆதரவு தெரிவித்த மகாராணி!
பல நூறு வருடங்களாக பிரித்தானியாவை ஆண்டு வந்த அரச குடும்பம், பின்னர் ஆட்சியில் இருந்து விலக. மன்னர் ஆட்சி கலைக்கப்பட்டு மக்கள் ஆட்சி மலந்தது. இருப்பினும் உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நாடுகளே இன்று வரை தமது நாட்டு ராஜ குடும்பத்தை பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் பிரித்தானிய ராஜ குடும்பம் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். பிரித்தானிய ராஜ குடும்பத்தினர், எந்த ஒரு அரசியலிலும் கலந்து கொள்வது இல்லை. இது அவர்கள் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் மரபு. இன் நிலையில் உக்கிரைன் மீது ரஷ்யா படை எடுத்து , பல பொது மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் கூட, பிரித்தானிய மகாராணியால் எதனையும் கூற முடியாத நிலை காணப்படுகிறது. ஆனால் மகாராணியார் நேற்று(07) செய்த ஒரு செயல் உலக மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அது என்னவென்றால்…
கனடா நாட்டு அதிபர் ஜஸ்டின் ரூடர் பிரிட்டன் வந்துள்ளார். அவர் மரியாதை நிமிர்த்தம் மகாராணியாரை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, மேசை மீது வைக்கப்பட்டிருந்த பூக்கள் தான் அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. அது மஞ்சல் மற்றும் நீல நிறத்தால் ஆன பூக்கள். அது உக்கிரைன் நாட்டுக் கொடியை நினைவு படுத்தும் பொருட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பூக்களுக்கு அருகாமையில் தான் மகாராணியாரும் தனது நேரத்தை செலவிட்டார். இதனால் அனைத்துப் புகைப்படங்களிலும் , அந்த பூக்கள் உள்ளது. இதனூடாக அவர் , தனது ஆதரவை உக்கிரைன் மக்களுக்கு சொல்லாமல் சொல்லியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.