சிறப்பு செய்திகள்
பெருவின் நாஸ்கா லைன்ஸ் அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் மரணம்

பெருவின் பிரபல இடமான நாஸ்கா லைன்ஸைக் (Nazca lines) காணச் சென்றபோது நடந்த விமான விபத்தில் ஐந்து சுற்றுலாப் பயணிகளும் இரு ஊழியர்களும் நேற்று மாண்டனர்.
Aerosantos என்ற சுற்றுலா நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானம் மரியா ரைக்கு (Maria Reiche) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணம் மேற்கொண்ட 7 பேரில் எவரும் உயிர் தப்பவில்லை.
இருவர் சிலி (Chile) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மூவர் நெதர்லந்தைச் (Netherlands) சேர்ந்தவர்கள் என்றும் நாஸ்காவின் சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்தது.
விமானம் விழுந்ததும் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததால் அடையாளம் காணமுடியாத அளவுக்குச் சடலங்கள் கருகிக் காணப்பட்டன.
விபத்துக்கான காரணம் விசாரிக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சு கூறியது.