சிறப்பு செய்திகள்
World Dream சொகுசுச் கப்பலுக்கான புதிய முன்பதிவுகள் தற்காலிக நிறுத்தம்: Dream Cruises கப்பல் நிறுவனம்

சிங்கப்பூரில் இயங்கும் World Dream சொகுசுக் கப்பலுக்கான புதிய முன்பதிவுகள் அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று Dream Cruises சொகுசுக் கப்பல் நிறுவனம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் cruises to nowhere என்ற பயணங்களை நடத்தும் 2 கப்பல்களில் ஒன்று World Dream.
சிரமத்தில் இருக்கும் அதன் முதன்மை நிறுவனமான Genting Hong Kong மூடப்படுவதற்கு விண்ணப்பித்த பிறகு, முன்பதிவுகள் 2 வாரத்திற்கு நிறுத்திவைக்கப்படும் என்று நிறுவனம்
கடந்த மாதம் 23ஆம் தேதி கூறியிருந்தது.