Jeff Bezosஇன் படகுக்கு வழிவிடத் தகர்க்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலம்

நெதர்லந்தின் ரோட்டர்டாம் (Rotterdam) நகரில் உள்ள பிரபல பாலத்தின் ஒரு பகுதி அமஸான் நிறுவனர் Jeff Bezosஇன் படகுக்கு வழிவிடுவதற்காகத் தகர்க்கப்படவிருக்கிறது.
“Koningshavenbrug” என்றழைக்கப்படும் அந்தப் பாலம் நூறாண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் பாலத்தின் நடுப்பகுதி, 40 மீட்டர் உயரம் கொண்ட பாய்மரப் படகுக்கு வழிவிடுவதற்காகத் தகர்க்கப்படும் என்று நகர நிர்வாக அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அது யாருடைய படகு என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
ரோட்டர்டாம் நகர ஊடகங்கள் அது Jeff Bezosற்குச் சொந்தமான படகு என்று தெரிவித்தன.
அந்த 127 மீட்டர் நீளப் பாய்மரப் படகு உலகின் ஆகப்பெரிய பாய்மரப் படகாக இருக்கும் என்று Boat International அமைப்பு கூறுகிறது.
படகு, பாலத்தைக் கடந்து வடக்குக் கடலுக்குச் செல்லவேண்டியுள்ளது.
பாலத்தைத் தகர்க்க முடுவெடுப்பதற்குமுன், அதன் பொருளியல், பராமரிப்பு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதாக நகர நிர்வாகம் சொன்னது.
பாலத்தைத் தகர்த்து, மறு சீரமைப்பதற்கான செலவை பாய்மரப் படகின் உரிமையாளர் ஏற்றுக்கொள்வார் என்றும் அது தெரிவித்தது.