சிறப்பு செய்திகள்
தான் தாக்கப்படுவதுபோல் சித்தரிக்கும் போலி காணொளியைத் தயாரிக்க ரஷ்யா திட்டமிடுகிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு
ரஷ்யாவைத் தாக்குவதுபோல் கொள்கைப் பிரசாரத்தைக் கொண்ட போலி காணொளியைத் தயாரிக்கத் திட்டமிடுவதாக அமெரிக்கா ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டியுள்ளது.
காணொளியில் இடம்பெறும் ராணுவப் பொருள்கள், உக்ரேன் அல்லது அதன் நட்பு நாட்டைச் சேர்ந்ததுபோல் சித்தரிக்கப்படுவதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஜான் கிர்பி (John Kirby) குறிப்பிட்டார்.
அந்தக் காணொளியை வெளியிட்டு, அதற்குப் பதிலடியாக உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் திட்டமிடுவதாகவும் அவர் சொன்னார்.
ரஷ்ய-உக்ரேனிய விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உளவுத் தகவல்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தூண்டுதல்களைக் கோடிகாட்டி அதன் ஆபத்தான பிரசாரத்தைத் தொடரவிடாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.