சீனப் பெருஞ்சுவரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்ற நடிகர் ஜாக்கி சான்
சீனப் பெருஞ்சுவரில் பெய்ச்சிங் (Beijing) குளிர்கால ஒலிம்பிக் சுடரோட்டத்தின் இரண்டாவது நாள் தொடங்கியுள்ளது.
ஹாங்காங் நடிகர் ஜாக்கி சான், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சீன விளையாட்டாளர்கள் ஆகியோர் பெருஞ்சுவரில் சுடரை ஏந்திச் சென்றனர்.
கிருமித்தொற்றுக் காரணமாகச் சுடரோட்டம் மூன்று நாள்களுக்கு மட்டுமே நடைபெறும்.
மேசைப் பந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மா லோங் (Ma Long), தேக்வாண்டோவில் இரு முறை தங்கப் பதக்கம் வென்ற வூ ஜிங்யூ (Wu Jingyu) ஆகியோர் இன்று (3 பிப்ரவரி) காலை சீனப் பெருஞ்சுவரின் படலிங் (Badaling) பகுதியில் சுடரை ஏந்திச் சென்றனர்.
அங்கு, தட்பநிலை பூஜ்யத்துக்குக்கீழ் 11 டிகிரி செல்சியஸாக இருந்தது.
“நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்தேன். இது என் நான்காவது ஒலிம்பிக் போட்டி. நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குக் குளிரவும் செய்கிறது!” என்று நடிகர் ஜாக்கி சான் செய்தியாளர்களிடம் கூறினார்.