சிறப்பு செய்திகள்
இளையர்களுக்கு COVID-19 நோயைத் தொற்றவைக்கும் சோதனை பாதுகாப்பானது”
இளையர்களிடத்தில் COVID-19 நோயைத் தொற்றவைக்கும் உலகின் முதல் சோதனை பாதுகாப்பானது எனக் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மேற்கொள்ளப்படும் சோதனை முயற்சியில் ஈடுபடும் Open Orphan எனும் நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
கடந்த ஆண்டிலிருந்து நீடிக்கும் சோதனையில் 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட 36 இளையர்கள் பங்கேற்கின்றனர்.
உடல் ஆரோக்கியமாய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஆண்களுக்குக் கொரோனா கிருமி தொற்றவைக்கப்பட்டது.
அவர்கள் பின்னர் தனிமைப்படுத்தும் இடத்தில் கண்காணிக்கப்பட்டனர்.
இளையர்களின் உடல்நலம் தொடர்ந்து 12 மாதங்களுக்குக் கண்காணிக்கப்பட்டது.
இளையர்கள் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றும் சோதனை முயற்சி பாதுகாப்பாய் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.