சிறப்பு செய்திகள்

மெக்சிகோவில் ஒரே மாதத்தில் செய்தியாளர்கள் நால்வர் படுகொலை

மெக்சிகோவில் ஒரே மாதத்தில் நான்காவதாக செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் சென்ற மாதம் மிக மோசமான கொலைகள் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

செய்தியாளர் ரொபெர்டோ டொலேடோ (Roberto Toledo) மேற்கு மாநிலமான மீசௌகானில் (Michoacan) உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசாங்கத்தின் ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதால், அச்சுறுத்தப்பட்ட இணையச் செய்தி நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார்.

2018 டிசம்பரிலிருந்து மெக்சிகோவில் செய்தியாளர்கள் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அண்மைய கொலைகளைக் கண்டித்து இம்மாத தொடக்கத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.