மியன்மார் ராணுவத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கையெறி குண்டு தாக்குதல் – இருவர் மரணம்
மியன்மாரில் ராணுவத்துக்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணியில் தாக்குதலில் நடத்தப்பட்டுள்ளது.
அதில் இருவர் கொல்லப்பட்டனர். 38 பேர் காயமுற்றனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்களைச் சிலர் கையெறி குண்டு வீசித் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்கு இன்னும் எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ராணுவம் மியன்மார் அரசாங்கத்தின் ஆட்சியைக் கவிழ்த்து ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், நேற்று மியன்மாரில் ராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கிலும் நடத்தப்பட்டன.
ராணுவத்திற்கு எதிராகச் சிலர் மௌன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், யங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்கள், மாலை 4 மணி வாக்கில் ஒரே நேரத்தில் கைகளைத் தட்டி ஒலி எழுப்பினர்.
அதில் ஈடுபட்டதாக நம்பப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.