பறக்க தயாராகும் முதல் பயணிகள் மின்சார விமானம்
முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முதல் பயணிகள் விமானம் விண்ணில் பறக்க தயாராகி வருகிறது.
இஸ்ரேலின் ஏவியேஷன்( Eviation) நிறுவனம் தயாரித்துள்ள ஏலிஸ் (Alice) என்ற இந்த விமானத்தின் இயந்திரம் சியேடெல் நகருக்கு வடக்கில் அமைந்துள்ள ஆர்லிங்டன் விமானத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மின்சார கார் மற்றும் செல்போன் போன்றவற்றுக்கான மின் கலங்களுக்கு இணையான தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் மின் கலத்திற்கு 30 நிமிடங்கள் மின்னேற்றினால், ஒரு மணி நேரம் விண்ணில் பறக்க முடியும். ஒன்பது பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த ஏலிஸ் விமானம் மணிக்கு சுமார் 440 கடல் மைல்கள் (nautical miles) தூரம் வரை பயணிக்கக் கூடியது.
விமானத்தின் அதிகப்படியான வேகம் மணிக்கு 287 மைல்கள். இரண்டு விமானிகள், 9 பயணிகள் மற்றும் 850 இறாத்தல் பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும்.
பயணிகள் வசதியாக அமர்ந்து செல்லக் கூடிய வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார விமானப் பயணங்கள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தியுள்ள இஸ்ரேல் நிறுவனம் 20 முதல் 40 பயணிகள் பயணிக்கக் கூடிய விமானங்களை 7 முதல் 10 வருடங்களுக்கு தயாரிக்க எதிர்பார்த்துள்ளது.