மியன்மார் ராணுவத்துடன் தொடர்புடையோர் மீது மேற்கத்திய நாடுகள் விதிக்கும் புதிய தடைகள்
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆகிய நாடுகள் மியன்மார் ராணுவ அரசாங்கத்துடன் தொடர்புடையோர் மீதும், நிறுவனங்கள் மீதும் புதிய தடைகளை விதித்துள்ளன.
7 தனிநபர்கள், 2 நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து அந்தத் தடைகள் விதிக்கப்பட்டன.
ADVERTISEMENT
மியன்மார் ராணுவம் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறினார்.
நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பது, தடையற்ற வகையில் மனிதாபிமான உதவியை அனுமதிப்பது, ஜனநாயகத்தை மீட்டெடுப்பது ஆகியவற்றையும் வலியுறுத்துவதாக அவர் சொன்னார்.
முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டதை அடுத்து புதிய தடைகள் நடப்புக்கு வந்துள்ளன.
76 வயது திருவாட்டி சூச்சி தற்போது அவர் 6 ஆண்டு கால தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.