சிறப்பு செய்திகள்
அமெரிக்கப் படையினரை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுமார் 100 பேரைத் தலிபான் கொன்றதாகக் கூறும் ஐக்கிய நாட்டு நிறுவனம்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுமார் 100 பேரைத் தலிபான் அமைப்பும் அதன் நட்பு அமைப்புகளும் கொன்றதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட அண்மை அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை சிக்கலான ஒரு சமூக, பொருளியல் அமைப்பு முடங்குவதைப் பிரதிபலிப்பதாக நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) கூறினார்.
நாட்டில் மோசமடையும் மனிதாபிமான, பொருளியல் நெருக்கடிநிலை குறித்து அவர் விடுத்திருக்கும் ஆக அண்மை எச்சரிக்கை அது.
தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது அது பொதுமன்னிப்பு வழங்குவதாக உறுதி கூறியிருந்தது.