எரிசக்தியைப் பெறுவதற்கு ஐரோப்பா மற்ற வழிகளை நாட வேண்டியிருக்கும்: நேட்டோ
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ஐரோப்பா அதன் எரிசக்தியை வெவ்வேறு இடங்களிலிருந்து பெற வேண்டியிருக்கும் என்று நேட்டோ (NATO) கூறியுள்ளது.
ஐரோப்பியக் கண்டத்தின் ஆகப்பெரிய இயற்கை எரிவாயு விநியோகிப்பாளராக உக்ரேன் உள்ளது.
அதனை ரஷ்யா தாக்கும் சாத்தியம் அதிகமாய் இருப்பதாக பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரேனின் எல்லையில் சுமார் 120ஆயிரம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
நேட்டோக் கூட்டணியில் உக்ரேன் சேருவதை நிரந்தரமாகத் தடைசெய்யும்படி மாஸ்கோ (Moscow) கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா எவ்விதப் படையெடுப்பிற்கும் ஏற்பாடு செய்வதைத் தடுக்க, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன.
ரஷ்யாவின் ராணுவப் படைபலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆனால் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்று மாஸ்கோ மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது.