ஹாங்காங் கடைகளில் மீண்டும் விற்பனையாகவுள்ள வெள்ளெலிகள்
ஹாங்காங்கில் இன்று கடைகளில் மீண்டும் வெள்ளெலிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்ற வாரம், வெள்ளெலிகள் விற்பனையாகும் கடை ஒன்றில் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அதையடுத்து, 11 வெள்ளெலிகளிடையே கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதனால் 2,200 வெள்ளெலிகள் கொல்லப்பட்டன. வெள்ளெலிகள் மீண்டும் விற்கப்படலாம் என்ற நிலையிலும் ஹாங்காங்கில் 5 செல்லப்பிராணிகள் விற்கும் கடைகள் மூடியவாறே இருக்கின்றன.
அந்தக் கடைகள் கிருமித்தொற்றுப் பரிசோதனையை மேற்கொண்டு சரியான முடிவுகளுடன் இன்னும் வரவில்லை என்று ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மற்ற செல்லப்பிராணிக் கடைகளில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டு மீண்டும் திறக்க அனுமதி பெற்றுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டது.
எனவே வெள்ளெலிகள் விற்கும் கடைகளுக்கு இழப்பீடாக ஹாங்காங் அரசாங்கம் 30,000 ஹாங்காங் டாலர் (சுமார் 5216 வெள்ளி) அளிக்கவுள்ளது.