தாய்லந்தில் 13 இடங்களில் குண்டுவெடிப்புகள்
தாய்லந்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நகரில் ஒரே இரவில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.
பெரும்பாலும் சாலையோரங்கள், சில கடைகளுக்கு முன்னால், ஒரு சந்தை, விலங்கு நல மருத்துவமனை ஆகிய இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
தெளிக்கும் கலன்கள், இரும்புக் குழாய்கள் ஆகியவற்றைக்கொண்டு செய்யப்பட்ட 3 குண்டுகள் வெடிப்பதற்கு முன்பே கண்டறியப்பட்டன.
காவல்துறையினர் நடத்திய சோதனையில் சந்தேகத்துக்குரிய கிளர்ச்சியாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
எனினும் குண்டு வெடிப்புகளுக்கும் சோதனைக்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறையினர் கூறவில்லை.
தாய்லந்தின் தென்பகுதியில் சிறுபான்மை மலாய்-முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுடன் அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய சில வாரங்களில் குண்டுவெடிப்புகள் நேர்ந்துள்ளன.
கிருமிப்பரவலால் அந்தப் பேச்சுவார்த்தை ஈராண்டுகளாகத் தடைப்பட்டிருந்தது.
தாய்லந்தின் தென்பகுதியில் 2004ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது நடக்கும் கிளர்ச்சியால் 7,300க்கும் அதிகமானோர் மாண்டனர்.