வலுவான மதிநுட்பச் சொத்துகளைக் கருத்திற்கொண்டு கூடுதலான உலக நிறுவனங்கள் சிங்கப்பூரில் தளம் அமைக்கக்கூடும்
சிங்கப்பூரின் வலுவான மதிநுட்பச் சொத்து உடைமையைக் கருத்திற்கொண்டு, அதிகமான உலக நிறுவனங்கள் இங்குத் தளம் அமைக்கக்கூடும்.
அதன் மூலம் RCEP எனும் வட்டார அளவிலான விரிவான பொருளியல் பங்காளித்துவத்தின்கீழ் செயல்படும் 15 உறுப்பு நாடுகளின் சந்தைகளில் அந்த நிறுவனங்கள் கால் பதிக்க முடியும்.
அந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு ஒரு மாதமாகி விட்டது.
இருப்பினும், மதிநுட்பச் சொத்தின் விதிகளின் பலன்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்வதற்குக் காலம் பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
RCEP உடன்பாடு நீண்டகால நோக்கில், சிங்கப்பூரில் இன்னும் கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சிங்கப்பூரர்கள் பெரும்பாலோர் பணியாற்றும் ஏற்றுமதிச் சேவைத்துறை அந்த உடன்பாட்டின்கீழ் செயல்படுகிறது.
மதிநுட்பச் சொத்து விண்ணப்பங்களில் மூன்றில் இரண்டு பங்கு 15 உறுப்பு நாடுகளிலிருந்து வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட மதிநுட்பச் சொத்து விதிகளால் வட்டாரத்தின் வர்த்தக நம்பிக்கை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.