கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. (பகுதி: 20)….. மௌனஅவதானி.

ஒரு நாட்டினுடைய பெரும் செல்வமே விவசாயந்தான்.நவீன தொழில்நுட்பத்தில் ஒரு நாடு எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும் விவசாயத்தில் வீழ்ச்சியடைந்தால் அந்த நாடு வறுமையான நாடுதான்.

எனவே உளவு நிறுவனங்கள் ஒரு நாட்டினுடைய விவசாயத்துறைமீது தமது முக்கியமான கவனத்தைத் திருப்பும்.

ஒரு நாடு என்றால் அது பல கட்டமைப்புகளைக் கொண்டதாகவே இருக்கும்.ஒவ்வொரு கட்டமைப்பையும் நலிவடையச் செய்வது அல்லது இல்லாதொழிப்பதன் மூலமே உலகில் தன்னனை ஒரு சர்வாதிகாரியாக நிலைநாட்ட முடியும் என்பதற்கமையவே சர்வாதிகார நாடுகள் வளர்முக நாடுகள் மீது உளவு நிறுவன ஒற்றர்கள் மூலம் சீர்குலைப்பை ஏற்படுத்துகின்றன.

அமெரிக்கா பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுக் கொண்டிருந்த போதும், அமெரிக்காவை வெளிப்படையாக கடும்போக்கில் எதிர்க்க பலநாடுகள் தயங்குகின்றன.

ஒரு நாட்டினுடைய மக்கள் தொகைக்கும் அதிகமாகவே விவசாயத்திலிருந்து பெறப்படும் உணவு உற்பத்தி இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் கலப்பையையும் மண்வெட்டியையும் பட்டையையும் விவசாயத்துக்காக பயன்படுத்திய சமூகம் காலப்போக்கில் மக்களின் உணவுத்தேவையின் அதிகரிப்பால் ஏக்கர்கணக்கில் விவாசாயத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

உணவுத்தேவை அதிகரிக்க அதிகரிக்க உணவு உற்பத்தியில் விழ்ச்சிக்கான சூழ்நிலையும் தோன்றியது.

பயிர்களை பூச்சிகள் உண்ணத் தொடங்கின.பூச்சிகளின் பெருக்கம் கூர்ப்பு நிலையிலிருந்து வந்ததா அல்லது ஒரு நாட்டினுடைய உணவு உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்த சதியா எனச் சந்தேக நிலை இருந்தாலும், சதி என்பதை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது.

அதிகரித்த விவசாயத்தினால் பயிர்களுக்கான பசளைகள் என்பது எரு குப்பை போன்றவற்றினால் ஈடுகட்ட முடியாத நிலை தோன்றியது.இக்காலச் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திய உளவு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து வேதியல் பொருட்கள் கலந்த இரசாயனப் பசளைகளை இறக்குமதி செய்து பயிர்களுக்கு பசலையாகப் பயன்படுத்தினால் அதிக விளைச்சலைப் பெற முடியும் என்ற பரிந்துரையை முன் வைத்த போது அப்பசளையின் இறக்குமதி முகவர்களாகச் செயல்பட்டவர்கள் துரிதகதியில் இயங்கத் தொடங்கினார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட வேதியில் பசளையினால் பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுத்தன.அதனைக் கண்டு விவசாயியும் மகிழ்ச்சியடைந்தான்.

வேதியல் பசளையால் மண்ணின் தன்மை தனது இயலபு;த் தன்மையை இழந்து வருகின்றது என்பதை உணர்ந்த விவசாயி வேதியல் பசளையைப் பயன்படுத்துவதிலிருந்து அவனால் விடுபட முடியவுமில்லை அதனை அவனால் நிராகரிக்கவும் முடியவில்லை.

வேதியல் பசளை இடுதல் ஒரு தவிர்க்க முடியாத நிலைக்கு விவசாயியைக் கொண்டு வந்துவிட்டது.இப்பசளையைப் பயன்படுத்தினால்தான் பயிர்களிலிருந்து அதிக விளைச்சளைப் பெற முடியும் என்ற நிலை நிரந்தரமாவதற்கு வேதியல் பசளையை மட்டுமே மண் உள்வாங்குமளவிற்கு மண்ணின் துணிக்கைகளில் வேதியல் பசளையின் அணுத்தன்மை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மண் பழுதடைதல் என்பது ஒருவரின் உடலில் நோய்தரும் கிருமிகள் தொற்றிக் கொண்டதற்கு ஒப்பனாதாகும்.

உளவு நிறுவனங்களே முகவர்கள் என்ற ஒற்றர்களுக்கூடாக, வெளிநாட்டு பசளை உற்பத்தியாளர்களாக அறிமுகமாவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உண்டு.

அதிக விளைச்சலைத் தரும் பயிர்களின் மரபணுக்கள் இயல்பான இயற்கைத்தன்மையிலிருந்து மாறுபட்டு அவை இயற்கைப் பசளைகளை நிராகரிக்கும் அதே வேளை வேதியல் பசளையை துரிதமாக உள்வாங்குகின்றன.

இயற்கையான மரபணுச் சிதைவினால் பாதிக்கப்படும் பயிர்கள் சேட்டமிழந்தவையாகவும்,விளைச்சலைத்தரமுடியாத நிலைக்கும் தள்ளப்படுகின்றன.

பயிர்கள் மீதும் மண்மீதும் அவற்றை அழிக்கின்ற பூச்சிகளை,வைரஸ்களை உளவு நிறவனங்களாக செயல்படும் வெளிநாட்டு பசளை உற்பத்தியாளர்கள் அவற்றுக்காக பயன்படுத்தும் வேதியல் பசளை வழியாகவே உற்பத்தி செய்கிறார்கள்.

மண்ணின் தன்மையை நிவர்த்தி செய்கிறோம் என்றும் பயிர்களின் நோய்களை குணப்படுத்துகிறோம் என்றும் விவசாயிக்கு விற்பனை செய்யப்படும் பூச்சி மருந்துகள் இன்னொரு பயிர் நோய்களை ஏற்படுத்துகின்றன.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.