சங்ககால மக்களின் வாழ்க்கை முறை!…. பாகம் – 1….. (சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)
தமிழ் மொழி, தோன்றிய காலம் தெரியாத தொன்மை மிக்கது. தமிழ் மக்கள் வரலாற்றுக்கு எட்டாத காலத்திலிருந்தே பண்பாட்டில் சிறந்து, நாகரிகத்தில் உயர்ந்து வாழ்ந்து வருகின்ற தனித்துவம் உடையவர்கள்.
அவ்வாறு, தொல்லியல் ஆய்வுகளுக்கும் எட்டாத காலத்திலிருந்து இன்றுவரை சீரோடு வளர்கின்ற மொழியோடும், சிறப்போடு விளங்குகின்ற பண்பாட்டோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் இனத்தின் வாழ்க்கை முறை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை உலகத் தமிழர்களே உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
பண்டைத்தமிழ் இனத்தின் வாழ்க்கை முறைகளையும், வாழ்வியல் நெறிகளையும் பற்றி நமக்கு அறியத்தருவன, தமிழில் உள்ள புராதன இலக்கியங்களே. அந்த வகையில் சங்க இலக்கியங்கள் முதன்மை வகிக்கின்றன.
பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியல் விழுமியங்களைப் பற்றிச், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள சில தகவல்களை எடுத்துக்கூறுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
“சங்க காலமும் சங்க இலக்கியங்களும்” என்ற பெயரில், 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எனது நூலில் அடங்கியுள்ள விடயங்களே கட்டுரை வடிவில் இங்கு தரப்படுகின்றன.
சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள் எவ்வாறு இருந்தன என்பதை மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்ளவேண்டியது, இன்றைய தமிழ் இனத்திற்குமட்டுமன்றி எதிகாலத் தமிழ் உலகுக்கும் மிகவும் அவசியமானதும், பயனுள்ளதுமாகும்.
காதலும், வீரமும் பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வாகவே அமைந்திருந்தன. போர்க்களம் செல்வதையும், எதிரியை எதிர்த்துப் போரிடுதலையும் மக்கள் பெருமையாகக் கருதினார்கள்.
குதிரை வண்டி, மாட்டுவண்டி என்பன தரைவழிப் போக்குவரத்துச் சாதனங்களான இருந்தன. பொதிகளைச் சுமந்து செல்லக் கழுதைகளைப் பயன்படுத்தினார்கள். பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளில் இருந்து குதிரைகள் தருவிக்கப்பட்டன. இதற்கெனக் குதிரை வியாபாரிகள்
இருந்தார்கள். வண்டிகளை இழுப்பதற்கு மட்டுமன்றி, தேர்களை இழுக்கவும், போர்செய்வதற்கும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. குதிரையில் ஏறியிருந்து பயணம்செய்வது தொலைதூரங்களுக்கு விரைவாகச் செல்வதற்கு ஏதுவாக இருந்தது. கோவேறு கழுதைகளும் ஏறியிருந்து பயணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன.
பண்டைத் தமிழர்கள், கடல்வழிப் பயணங்களை மேற்கொண்டார்கள். கடலில் நீண்டதூரம் பயணம் செய்து தொலைதூரத்து நாடுகளில் வணிகம் செய்தார்கள். கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழ்மக்கள் சாவகம்
என்று சொல்லப்பட்ட கிழக்கிந்தியத் தீவுகளுக்கும், காழகம் எனப்பட்ட பர்மா முதலிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள்.
கோவலன் வணிகத்திற்காகப் பலநாடுகளுக்கும் சென்று வந்தவன் என்று, சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்ற செய்தியில் இருந்து, கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர்கள் கடல்கடந்த நாடுகளுக்குச் சென்று வணிகத்தில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள் என்ற வரலாற்றுத் தகவலை அறிய முடிகிறது.
சங்ககாலத்து மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் வாழ்ந்திருந்த இடத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. அந்த வகையில் அந்த மக்களின் வாழ்விடங்கள் ஐந்து நிலங்களின் அடிப்படையில் நோக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலைநிலம் என்பனவே அவையாகும். அந்த ஐவகை நிலங்களுக்கும், அந்த நிலங்களில் கிடைக்கப்பெற்ற வளங்களுக்கும் ஏற்ப அவர்களது வாழ்க்கை முறைகளும் மாறுபட்டனவாக நிலவின.
குறிஞ்சி நிலத்து மக்கள்
மலையும், குன்றுகளும், மலைசார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் எனப்பட்டது. குறிஞ்சி நிலத்து மக்களின் வாழ்க்கை பசுமை நிறைந்தது. குன்றில் வாழ்பவர்கள் என்பதால் குன்றவர் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். குன்றவர் என்பது காலப்போக்கில் மருவி குறவர் என்று ஆகியிருக்கவேண்டும். அதனால், குறிஞ்சி நில மக்கள் குறவர் என்றும். குன்றவர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களைக் கானவர்கள் என்றும் அழைப்பார்கள்.
குறிஞ்சி நிலத்தில் நீர்ச் சுனைகள் நிறைந்திருக்கும். குன்றுகளில் தோன்றும் அருவிகள் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். மூங்கில் புதர்கள் செறிந்திருக்கும். விண்ணை முட்டுவதுபோல மூங்கில்கள் வளர்ந்திருக்கும். அகில், அசோகு, நாகம், சந்தனம், தேக்கு, வேங்கை, கடம்பு, கருங்காலி முதலிய மரங்கள் நிறைந்து நிற்கும். குறிஞ்சி, காந்தள் முதலிய மலர்கள்
அந்தந்தக் காலங்களில் மலர்ந்திருக்கும். வண்ணக்கிளிகளும், தோகை மயில்களும் மற்றும் வகைவகையான பறவை இனங்களும் குடிகொண்டிருக்கும். இவ்வாறு எப்போதுமே இயற்கை எழில்கொஞ்சும் வனப்பான பிரதேசமே குறிஞ்சி நிலமாகும்.
யானை, புலி, கரடி, பன்றி, மான், குரங்கு போன்ற விலங்குகளும் குறிஞ்சிநிலத்தில் வாழ்வதால், அந்த விலங்ககளோடு போரிட்டு வாழ்க்கை நடாத்த வேண்டிய நிலைமை குறிஞ்சி நில மக்களின் அன்றாட வாழ்வாக அமைந்திருந்தது. அம்பும், வில்லும் அவர்களது ஆயுதங்களாக இருந்தன. வேட்டையாடுதல் அவர்களின் முதன்மையான தொழிலாக விளங்கியது. வில்வித்தையிலே அவர்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்.
வில்வித்தைக்கான பயிற்சியில் சிறுவயதிலிருந்தே ஈடுபடுவதால் நல்ல உடல்வலிமை கொண்டவர்களாக வாழ்ந்தார்கள்.
விலங்குகளை வேட்டையாடும்போது தமக்கு உதவிசெய்வதற்காக நாய்களை வளர்த்தார்கள். வேட்டைக்குச் செல்லும்போது நாய்களையும் தம்மோடு கூட்டிச் சென்றார்கள்.
மரங்களை அழித்து, வேர்களைப் பிடுங்கி, நிலத்தைப் பண்படுத்தி நெல்லும் தினையும் விதைத்தார்கள். தினைக்கதிர்களைத் தின்னவரும் கிளிகள் மற்றும் குருவிகளிடமிருந்து அவற்றைக் காப்பதற்காகத்
தினைப்புனங்களிலே பரண்களை அமைத்து அந்தப் பரண்களிலே பெண்கள் காவலுக்கு இருப்பார்கள். அவர்கள் கவண் மூலம் கற்களை எறிந்து பறவைகளைத் துரத்துவார்கள். இரவு வேளைகளில் தினைப்புனத்தை தின்று அழிக்கவரும் யானைகளை விரட்டுவதற்காக ஆண்கள் காவல் செய்வார்கள். அவர்கள் தீப்பந்தங்களை எறிந்து யானைகளை விரட்டுவார்கள்.
தேன், தினைமா, அரிசிச்சோறு, கிழங்குகள், பழங்கள், மான் இறைச்சி, பன்றி இறைச்சி என்பன அந்த மக்களின் உணவாக இருந்தன. தேனை மூங்கில் குழாய்களிலே அடைத்து நெடுநாள் ஊறவைத்து ஒருவகை மதுவைத் தயாரித்தார்கள். மது அருந்தும் பழக்கம் அவர்களிடையே இருந்திருக்கின்றது. கரும்பிலிருந்து சாறுபிழிந்து எடுத்தார்கள்.
குறிஞ்சிநில மக்கள் இறை நம்பிக்கை உடையவர்களாக விளங்கினார்கள்.
இறைவனை வணங்கினார்கள். மலைக்கடவுளை வேங்கை மலர்களால் பூசித்து வழிபட்டார்கள். முருகனைத் தமது தெய்வமாகக் கொண்டிருந்தார்கள். அவனைப் போற்றிப் பாடினார்கள். குரவைக்கூத்து ஆடினார்கள். பறையடித்து வெறியாட்டு நிகழ்த்தினார்கள். இவ்வாறெல்லாம் இறைவழிபாடு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
குறிஞ்சி நிலங்கள் எவ்வெந்த நாட்டின் எல்லைகளுக்கள் இருக்கின்றனவோ அவ்வந்த நாட்டு அரசாட்சியின் கீழே அமைந்திருந்தன. அதே வேளை குறிஞ்சி நிலங்களில் சிற்றரசர்களும் இருந்தார்கள். தத்தம் பகுதிகளை அவர்கள்
ஆட்சிபுரிந்தார்கள்.
எவ்வளவு இயற்கை வனப்பு நிறைந்திருந்தாலும், குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை அல்லல் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு நாளும் தம் தேவைகளுக்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. வாழ்வில் மேலும் நாகரிகமடைவதற்கான வழியைத் தெரிந்து கொள்வதற்கோ அல்லது வாய்ப்பை அடைந்து கொள்வதற்கோ அவர்கள் வாழ்ந்த சூழல் தடையாக இருந்தது.
முல்லை நிலத்து மக்கள்
காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலத்தில் அளவற்ற மேய்ச்சல் தரை குறைவற்றுக் கிடந்தது. எனவே மந்தைகளை மேய்ப்பதே அங்கு வாழ்ந்த மக்களுக்கு முதன்மையான தொழிலாக அமைந்தது. தாங்கள் வாழ்வதற்காக அவர்கள் குடிசைகளை அமைத்தார்கள். குடிசைகளுக்குப் பக்கத்திலே
மாட்டுத் தொழுவங்களை அமைத்தார்கள். சுற்றவர நாற்புறமும் வேலிகளை அமைத்து அதற்குள்ளே ஆடுகளை அடைத்து வளர்த்தார்கள்.
குடும்பம் குடும்பமாக மக்கள் குடிசைகளிலே வாழ்ந்தார்கள். ஆட்டுத் தோலினால் படுக்கைகளை அமைத்தார்கள். பலகுடிசைகள் ஓரிடத்தில் அமைந்து அதுவொரு சிற்றூராக விளங்கியது. இவ்வாறு முல்லை நிலமெங்கும் பல்வேறு ஊர்கள் இருந்தன. அங்கெல்லாம் மக்களின் வாழ்விடங்கள் அமைந்திருந்தன.
முல்லை நிலமக்கள் ஆயர், அண்டர், இடையர், கோவலர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். திருமாலைத் தம் தெய்வமாக வழிபட்டார்கள்.
மந்தைகளை மேய்ப்பதுடன், காடுகளை வெட்டி அவரை, துவரை, கேழ்வரகு முதலியவற்றைப் பயிரிடுதலிலும் ஈடுபட்டார்கள்.
பாலிலிருந்து தயிர் செய்தார்கள். தயிரைக்கடைந்து வெண்ணெய்யும், நெய்யும் எடுத்தார்கள். தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பவற்றை விற்று தானியங்களையும் மற்றும் தேவையான பொருட்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
பெண்கள் பாலையும், பால்உற்பத்திப் பொருட்களையும் காசுக்கு விற்று, அந்தக்காசுகளைச் சேமித்துவைத்து போதிய தொகை சேர்ந்ததும் அந்தப்பணத்திற்கு பசுக்களையும் எருமைகளையும் விலைக்கு வாங்கினார்கள்.
ஆண்கள் வேட்டையாடி, யானைகளைக் கொன்று, யானைத்தந்தங்களை மதுபானக் கடைகளில் கொடுத்து மதுவை வாங்கி அருந்தினார்கள். தேன், கிழங்குகள் போன்றவற்றையும் மதுவுக்காகப் பண்டமாற்றுச் செய்திருக்கிறார்கள்.
பால், தினைச்சோறு, வரகுக்சோறு, இறைச்சி, கிழங்குகள் என்பன இவர்களது உணவுகளாக இருந்திருக்கின்றன. பால். தயிர், மோர் என்பவற்றைப் பண்டமாற்று முறையில் விற்றும் தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டார்கள்.
தனித்தனி குடும்பங்கள், தமக்கெனக் குடிசைகள், தங்களது உடமைகளாக ஆடுகள், மாடுகள் மற்றும் பொருட்கள், தேவையானளவு பயிசெய்ய நிலம், தேவைக்கதிகமான மேய்ச்சல் நிலம் என்றிவ்வாறெல்லாம் முல்லை நிலத்து மக்கள் சற்று வசதியாக வாழ்ந்தார்கள்.
பேரரசுகளின் ஆட்சிக்குட்பட்ட முல்லை நிலங்களும் இருந்திருக்கின்ற

ன. சிற்றரசர்களால் பரிபாலிக்கப்பட்ட முல்லை நிலங்களும் இருந் திருக்கின்றன.
(தொடரும்)