உளவு நிறுவனங்கள்!…. (தொடர்….19)….. மௌனஅவதானி.
விவசாயம் என்பதும் குடிமக்கள் உணவுப் பஞ்சமில்லாமல் வாழ்வது என்பது ஒரு நாட்டின் அதிமுக்கிய பொருளாதாரக் கட்டமைப்பாகும்.
ஒரு நாட்டினுடைய விவசாயத்துறையின் வளர்ச்சிதான் அந்நாட்டை வல்லமை கொண்ட நாடாக உருவாக்கும்.
என்னதான் நவீன தொழில்நுட்பத்தில் அதிஉச்ச நாடாகவிருந்தாலும் விவசாயத்துறை நலியுமானால் முழு நாடுமே தள்ளாடத் தொடங்கிவிடும்.;
ஒரு நாட்டினுடைய மண் அந்த நாட்டு மக்கள் உணவாக உட்கொள்ளும் பயிர் வகைகளை விளைவிக்கக்கூடிய விவாசாயத்திற்கு உகந்த மண்ணாக இருந்து போதிலும், உளவு நிறுவனங்களைச் சேர்ந்த வெளிநாட்டு விவசாய நிபுணர்கள் சுதேச விவசாய அதிகாரிகளின் துணையுடன் அந்த நாட்டு மண்ணில் அதிமுக்கியமான உணவுப் பயிர்கள் விளைவிக்கக்கூடிய சாத்தியம் இல்லையென அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
விளைவிக்கக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்துவதற்கு செலவழிக்கும் நிதியைவிட அவ்வுணப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது செலவைக் குறைக்கும் என ஆலோசனை வழங்குவார்கள்.
அந்த ஆலோசனையை உண்மையென நம்பிய அந்த நாடும் தம்மண்ணிலே விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிரு;து இறக்குமதி செய்யத் தொடங்கும்.
இது அந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தும்.உணவு என்பது உயிர் வாழ்வதற்கான ஆதார சக்தியாகும்.
தமது நாட்டிலே விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்களின் விளைச்சலில்,அப்பொருட்கள் கொண்டுள்ள போசாக்குத் தன்மை பற்றியும்,உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்காத விதத்திலும் அவ்வுணப் பொருட்கள் மீது அதிக கண்காணிப்புக் கொண்டிருக்கும்.
ஒரு நாட்டினுடைய வளம் என்பது ஆரோக்கியமான நோயற்ற மனித வளத்திலேயே தங்கி உள்ளது.நோய் கொண்ட மனிதர்ககளின் நோய்க்கான மருத்துவச் செலவுக்காக ஒரு நாடு அதிகளவு நிதியை செலவழிப்பது மட்டுமல்ல,அடுத்தடுத்த பரம்பரையும் உடல்நலம் குன்றிய ஆற்றலற்ற சமூகமாக மாற வாய்ப்புண்டு.உதாரணமாக இன்று உலகம் எங்கும் பரவியுள்ள கோவிட் 19 நோய்வைரஸைப் பரவாமலும் நோயுற்றவர்களை அதிலிருந்து பாதுகாப்பதற்காகவும் உலக நாடுகள் அதற்காக பெருமளவு நிதியைச் செலவழிக்கின்றன.இந்த நோய் வைரஸ்கூட உளவு நிறுவனத்தின் சதி என்பதை உலக நாடுகள் பல ஏற்றுக் கொண்டுள்ளன.
உடல் வளமும், மூளை வளமும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது.இந்த இரண்டும் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த நாடு முன்னேற்றமடையும்.
நோய் கொண்ட மனிதர்களாக உருவாக்குவதில் உளவு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.
ஒரு நாட்டின் மண்ணில் ஒரு குறிப்பிட்ட பயிர்களை விளைவிக்க முடியாது என்று ஆலோசனையை வழங்கும் உளவு நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்பதிலும், இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி,இக்கட்டுரையின் முதற்பகுதிகளில் தெரிவித்தது போன்று ஒரு நாட்டினுடைய கட்டமைப்புகளைச் சிதைக்க பணம் பொருள் பெண் என்பவற்றை உளவு நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனவோ அது போன்றுதான் வெளிநாட்டிற்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகளை அதிகாரிகளின் பலவீனங்களுக்கு ஏற்ப பயன்படுத்தும்.
இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ,இறக்குமதி செய்யத் தேவையில்லாத பொருட்களையும் இறக்குமதி செய்வதற்காக அமைச்சர்களிலிருந்து அதிகாரிகள் இறக்குமதியாளர்கள் வரை இக்கட்டுரையில் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது போன்ற பணம் பெண் பொருள் போன்றவை இலஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகின்றன.
உணவு என்பது உயிர்க்கவசம் மட்டுமல்ல அது மருந்தும்கூட.உணவுப் பயிர்களின் விளைச்சலிருந்து கிடைக்கக்கூடிய உணவு விளைச்சல் வேதியல் பொருட்களின் பாவனையற்று இருக்கும் போதுதான் அந்த உணவு உயிர்க்கவசமாகவும்,மருந்தாகவும் இருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுடன் கலக்கப்பட்டிருக்கும் உயிர்க்கொல்லி வேதியல் பொருட்கள் உடனடியாக மரணத்தை ஏற்படுத்தாது, அந்த உணவை உண்ணும் மக்களை நோயாளிகளாக்கி படிப்படியாக நோயினால் அவர்களை நலிவடையச் செய்து இத்தகு உணவுப் பொருட்கள் மரணத்தை ஏற்படுத்தும்.
மனித உடல் வேதியல் பொருட்களினாலேதான் ஆக்கப்பட்டவை என்பதை இக்கட்டுரையின் முன்னைய தொடர்களில் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் அவ்வேதியப் பொருட்கள் கூடினாலே குறைந்தாலோ உடல் உறுப்புக்கள் அவற்றுக்கான தொழில்பாடுகளில் குறைகொண்டவையாகவே இருக்கும்.அதற்குப் பெயர்தான் உடலுக்கு ஏற்பட்டுள்ள நோய் என மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் நிறுவியுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுடன் கலக்கப்பட்டிருக்கும் வேதியல் பொருட்களின் தீமையை இறக்குமதி செய்யும் நாட்டினால் வேதியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்க இயலாது.கண்டுபிடிக்கும் பட்சத்திலும் இலஞ்சம் போன்றவற்றினால் அது மூடிமறைக்கப்பட்டுவிடும்.
உணவுப் பொருளில் அந்த வேதியல் பொருளின் கலப்பு உணவுப் பொருள் கெட்டுப் போகாமலிருப்பதற்கான கலப்பு என அங்கீகாரத்தை அதிகாரம் கொண்ட அதிகாரி கொடுத்துவிடுவார்.
சிறிது சிறிதாக நோயை ஏற்படுத்தும் வேதியல் பொருட்கள் கலந்த இறக்குமதி செய்யப்படும் உணவை உண்ணும் ஒரு மனிதனின் மரபணுக்களின் வீரியம் படிப்படியாகக் குறைந்துவிடும்.
மரபணுக்களின் வீரியமே அவனின் அடுத்த சந்ததியின் உற்பத்திக்கான அத்திவாரமாகும்.வேதியல் பொருட்கள் கலந்த உணவை உண்ணும் ஆணின் விந்திலும், பெண்ணின் கருமுட்டையிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆணின் விந்தணுக்கள் வீரியமற்றவையாக இருக்கும் போதும்,பெண்ணின் கருமுட்டைகள் வீரியமற்றவையாக இருந்தாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வலிமையற்ற குழந்தைகளாக மட்டுமல்ல,விழிப்பார்வையற்றவர்களாகவும்,உடல் உறுப்புக்களில் வளர்ச்சியற்றவர்களாகவும் இருக்க நிறையவே வாய்ப்புக்கள் உண்டு.
உளவு நிறுவனங்கள் ஒரு நாட்டைச் சிதைக்க எல்லா வழிகளையும் கையாள்வதற்கான பலமான வலைப்பின்னலை வைத்திருப்பார்கள்.
எந்த ஒரு உளவு நிறுவனமும் ஒரு நாட்டினுடைய சுதேச அதிகாரிகளின் உதவி இல்லாமல் அந்த நாட்டுக்குள் ஒரு போதுமே உளவு வேலை பார்ப்பதற்காக நுழைய முடியாது.
(தொடரும்)